மதுரை

வாஞ்சையோடு வாவென் றழைக்கும்
வைகை நதிக்கரையோரம்
தமிழ் நாட்டின் தன்னிகரில்லா
தொன்மைக்குத் தானடிமை!

பாண்டிய மன்னனாம்
குலசேகர பாண்டியனின்
புகழ்பாடும் இன் நகரில்
கற்பிற்கு காரணத்தோடு கண்ணகியும்
ஒன்பது வாசலோடு
மீனாட்சியம்மனும் குடிகொண்டு!

இந்தியாவின் பெரு நகரில்
இடம் நாற்பத்து நான்கென
தடம் பதித்து தரணியெங்கும்
தமிழை சங்கமமைத்து- ஆம்
உலகச் சங்கமமைத்து- உணரவைத்த
உன்னத நகரமாம் மா மதுரையே

எழுதியவர் : யோகராணி கணேசன் (15-Oct-19, 9:41 am)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 338

மேலே