தற்கால தடயங்கள்

கல்லாதோர் கருத்துக்கள் கடுங்கொடூரம் பயக்கும்
நல்லறிவு படைத்தோர் அதிலருகி இருப்பாரே
மேலோட்டமாய் ஆயும் குறைமதி அதிகமுண்டு
மாம்பழ வண்டாய் தோற்றம்.

கற்றோர் யாவரும் கலித்துத் தெளிந்தோரன்று
கடலூறும் கலத்தில் நீறேறும் குறையுண்டு
அறிந்து நீக்காவிடின் அமிழும் கலம்போல
அறிவு பாழ்பட்டு அர்த்தமிழப்பர்.

நீண்ட முயற்சியால் உயர்வை அடைந்தவுடன்
செய்த முயல்வை செயலற்றதாய் ஆக்கிவிடின்
செழித்து உயர்ந்த மரத்தில் வானவெடிப்பு
விழுந்து அழித்ததாய் ஆகிவிடும்.

கொடியில் உறுதியுண்டு குலங்காக்கும் ஒருவனாய்
பற்றிச் செழிக்கும் பட்டமரமாய் இருந்தாலும்
உற்றார் உறவினரிடம் குறைகண்டால் குறையும்
சூழ்ந்திருக்க வாழும் வாழ்வு.

நம்பியதால் வாக்களித்து நாடாள அனுப்பப்பட்டோர்
தும்மியின் வாலில் பெருங்கல்லை கட்டியதுபோல்
வாக்களித்தோர் மனதில் பெருந்துன்பம் ஊட்டினால்
நரவதனை நலபாகத்தில் இட்டதாம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (17-Oct-19, 7:59 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 91

மேலே