அரவாணியும் ஆயிரம் வீரரும்

சரித்திரம் (வெண்பா)

அன்று அராபியன் யேசுவைரோ. மானியரும்
கொன்றிடக்கொ தித்தார் அராபியர் --- கொன்றவனோ
ஏசு கடவுளானார் ஏசுமறைந் தாரென
பேச்சைவிட் டார்அராபி யர் (1)

சள்ளை ஒழித்தரோமன் தொல்லைநீங்கி ஆண்டானாம்
எல்லை விரித்து அரபுவரை --- அல்லா (கர்த்தர்)
துறந்தேற்றார் ஏசை துணையாய் அராபியர்
நூறேழாண் டும்சென் றது (2)

மகமத் நபிஅல்லா வேறுயேசு வேறென்றார்
மக்கா மதினா மிரண்டது --- மக்கள்
மகமதியர் ஆக முகம்மற்றார் மற்றோர்
மகமதியர் எங்கும் விரிந்து (3)

ஏற்றநபி ஏசை அராபியர் போற்றிப்பின்
ஏற்க மறுத்தார் கடவுளாய் --- ஏற்றயேசு
அல்லாக் குமாரனோ அல்ல அனைவரும்
அல்லா மகனாய் தெளிந்து. (4)
( இயேசு ஓரு நபியே கடவுள் மகனல்ல)

கடவுளையே மாற்றிய ரோமர் கடந்தார்
தடாலடி யாய்யரபு விட்டுக் --- கடந்து.
இடம்பெயர்ந்த யேசு கடவுளானார் ரோமில்
இடமா மடமே பெரிது. (5)
(மாற்றிய = ஏமாற்றிய)
(ரோமானியரகள் விரட்டப்பட்டனர்)

முகமதுகா லத்தில் மகிழ்ந்தகுப்ளே மன்னன்
முகத்தைக் கிருத்துவர் பக்கல் --- பகையாய்
திருப்ப அரண்டது ஐரோப் திருந்தித்
திரும்பாப்போ னார்ரோம ரும். (6)

முகமத் நபியை மலர்ந்தேற்றான் குப்ளே
முகமத்கொள் கைபரப்பக் கோணா --- முகத்துடன்
இங்லாந்து டன்பலரை அன்று மிரட்டினான்
எங்கும் அரண்டார் ப லர் (7)

வீரத்தை மூர்கனிஷ்க தேசத்தை வீழ்த்திப்பின்
கூர்தல் படைகொண்டு ஊர்ந்திட--- நீரக
வெஞ்சமர் சாய்த்ததில் மிஞ்சிய மங்கோலி
தஞ்சம் புகுந்தார் பயந்து (8)

அங்கேதான் கற்றான் வெடிவித்தை அங்கலாய்ப்பாய்
செங்களவாழ் வில்தொலைத்தான் மாறுகைகால் --- அங்கண்ணில்
ஒன்றும் விழுப்புண்கள் கொண்டுத்தன் நாட்டிற்கு
கொண்டுசேர்த்தான் பீரங்கி யை (9)
(செங்களம்= போர்க்களம்)

அன்றுதொட்டு இன்றும் தொடர்கிறார் பீரங்கிக்
குண்டுக்க லாச்சாரம் எங்கெங்கும் --- குண்டை
உலகெங்கும் வைத்தார் வெடித்தார் பலவாய்
கலங்குகிறார் பாரில் மனிதர் (10)

அவரைத் தொடர்ந்துவந்தான் ஐயமிலாச் செங்கிஸ்
அவன்பிடித்தான் ரஷ்யப் பகுதி --- அவனது
எல்லைமங்கோ லித்தாண்டி இல்லைக் கடல்வரவும்
எல்லைபார தத்திலில்லை சொல் (11)

ஆறாம்நூற் றாண்டில் கனிஷ்கரும் பாரதத்தில்
ஆற்றினான் நல்லாட்சி காந்தாரம் --- காராது
நாட்டில்புத் தம்பரப்ப பின்வம்சம் கோட்டைவிட்டார்
நாடேஆப் கானிஸ்தா னாம். (12)

புத்தத்தால் நாம்எத் துணையாம் பலமிழத்தல்
எத்தனை நாட்டுடைய தாக்குதல் --- புத்தத்தால்
பாரதமா னத்துடன்போர் வீரம்போ கச்சமண
பார்வை கெடுத்ததுவும் நேர் (13)

போலன் நுழைக்கணவாய் போலகைபர் கஜ்னியைப்
போலத் தெரிந்தார்யார் யாருமில்லை --- போலாய்
முழங்கியபீ ரங்கிகண்டு வேழம் மிரண்டு
விழநம்ப டைஓட லாம். (14)

இப்படி பீரங்கி தப்பாது தாக்கியே
அப்பால் பதினெண்மு றைவந்தான் --- சொப்பனமே
அம்மட்டில் கஜ்னிபடை கொள்ளையும் சிம்மமாம்.
அம்மாவே ழம்தோற் றது (15)
(சிம்மம்= சிங்கம்)

கொள்ளையராம் கஜ்னிகோரி கொள்ளையிட்டார் பாரதத்தை
கொள்ளையனாம் கோரி அடிமைகளும் --- கொள்ளையிட்டார்
குத்புதீன்பால் பன்அடிமை புத்தியிலார் அண்டைநாட்டு
சொத்தனைத்தும் சொத்தாம் அவர்க்கு (16)

ஆனை யுடனடி பிடியும் ஓட்டி
ஆன ஆபரண வைர ரெத்தினம்
ஆணி முத்துடன் பொற்குவி யல்களும்
ஆடக முத்துடன் வைரமார் புக்கச்சை
கைவளை நெகிழி கைத்தோள் வளைகள்
கைவிரல் பஞ்சாட் சரவைர மோதிரம்
வைரநீல ரெத்னபச்சை கண்டி ஆரம்
வைரமுத்து உடியானம் வங்க்கி மேகலை
நவரத் தினமாலை முத்துச் சரங்கள்
ஒன்று விடாது அம்பாரி மீதேற்றி
ஓட்டிச் சென்றார் அராபு நாட்டுக்கு
கட்டினார் ஆங்கோர் பல்கலைக் கழகம்
கட்டியதிரு மங்கையாழ் வாரோ
கோரி கஜினி மாலிகாபூர் கொள்ளையரே (17)

குத்புதீன் கட்டியதே குத்புதீன் கோபுரம்
குத்புதீன் ஐபெக்வம் சம்சிலதே.--- குத்புதீன்பின்
கில்ஜி வடக்கே குடுமிவரி அள்ளியள்ளிக்
கில்ஜிக்குத் தந்தார் குடி (18)

அல்லா வுதீன்ஜலாலைக் கொன்றுபிடித் தானாட்சி
நல்ல அழகிராணி பத்மினியின் --- பொல்லாத
வில்லன் நிலையாடி முன்னழகைக் காட்டென்றான்
கள்ளனவன் பெண்வெறி யன் (19)

அரவாணி ஆணுருவில் பெண்மாலி காபூர்
அரவாணி காம்பெத் கரையில் --- தரம்கண்டு
ஆயிரம்பொன் நஸ்ரேத்தும் தாயமாய்கில் ஜிக்குவாங்க
ஆயர்க லையரவா ணி (20)

மாலிகாபூர் இந்துஅலி மாறியதோ இஸ்லாமாம்
மாலிகாபூர் கில்ஜியின்மெய்க் காவலன்பின் --- மாலிகாபூர
சேனைத் தலைவனாகி மேவாரை யேன்றான்தன்
சேனைமங்கோல் சாய்க்கவென் றான் (21)

மாலிகாபூர் கில்ஜியின் மாபெரும்நம் பிக்கையாளன்
மாலிகாபூர் வென்றநாட்டில் இந்துக்கள் --- மாள
அறியாக் குடுமிநிலம் வீட்டு வரியில்
பரிதவித்தார் இந்துக் குடி (22)

மாலிகாபூர் வென்றது நம்அமேரா மாநிலமே
மாலிகாபூர் கூர்வாளைக் காட்டிமதம் --- மாற்ற
பலர்பயந்து மாறினார் முஸ்லீமாய் பின்னும்
பலவரியும் கட்ட பயந்து (23)

மாலிகாபூர் மங்கோலர் மாபெரும் சேனையை
மாலிக்வி ரட்ட பலமாதம் --- மாண்டாரே
மாலிக்கால் மங்கோல் இசுலாமாய் மாறினார்
மாலிக்நோக் கம்கில்ஜி நோக்கு. (24)

பஞ்சாப்பை வென்றுபிடித் தான்நதி ஐந்தையும்
கெஞ்சியோர்க்கு மொட்டையுடன் தொப்பிபோட்டான் --- துஞ்சாமல்
ஓடி பயந்து ஒளிந்தக் குடிகாக்க
நாடநாதி இல்லாம லே. (25)

யாதவக் கோட்டையாம் தேவகிரி யாருக்கும்
யாதவர் அஞ்சாக் குடிகளே --- யாதவரை
பொல்லாத மாலிக் பொறுக்காமல் தின்றானே
வில்ல அரக்கன் அவன்(26)

கொள்ளையோ கொள்ளை பசுகுதிரை டில்லிபோக
கொள்ளையில் தங்கவெள்ளி ரெத்தினங்கள் --- கொள்ளையில்
கோகினூர் வைரமும் கொண்டுபோனான் கில்ஜிக்கு
கோலாக லக்கொண்டாட் டம் (27)

வந்தானாம் மாலிகாபூர் வாரங்கல் வென்றானாம்
அந்தநேரம் மொட்டை மதம்மாறல் --- அன்றும்
நடந்தேறச் சொத்தும் இடம்மாறிச் செல்ல
அடாவ டிகொடூரம் பார் (28)

வாரங்கல் லில்மாலிக் ஆராய்ந்து கேட்டறிந்தான்
பார ததமிழ்நா டேவளமாம் --- ஆர்ப்பாக
தாலிமாயி ரம்பேர் படையுடன் மாலிகாபூர்
காலைவைத்தான் சோனாட்டில் தான் (29)

காவலிலா சோனாட்டில் சோழரைவெட் டிக்கடந்தான்
சோனாடு விட்டு மலபாரில் --- சேனைமாலிக்
சோரா மலையாளி யைவெட்டச் சேர்ந்தாராம்
சோனகர் முஸ்லீம் மதம். (30)
(சோனகர் = அராபியர்)

அடித்தகொள்ளை ஆனையேற்றி தாக்கத் தொடர்ந்தார்
அடுத்தபாண்டி மேலும் தமிழர் --- அடங்கலரால்
மொட்டையுண்டு பட்டைநீரு நீக்கபலர் மாறினார்
அட்டையாய் முஸ்லீமுக் கும் (31)

எவன்முஸ்லிம் ஆனான் அவனுக் குநிலம்
எவனும் மதம்மாறிப் போனாள் --- அவனிடம்
கொள்ளை கொடுத்தோம் கொலையேன் எனநினைத்த
நெல்லைராம நாத புரம் (32)

முதலில் தமிழ்நாட்டில் முஸ்லீம் நுழைந்தான்
உதவாத பேடிமாலி காபூர் --- அதோட
பதமாய்யோர் ஆயிரமுஸ் லீம்கள் முதலில்
விதமாய்நு ழைந்தசனி கள்(33)

முதலில் நுழைந்தமுஸ்லீம் மாலிக் வருடம்
உதவாத் தமிழன் துரத்தா --- இதமென
விட்டது ஆயிரத்து முந்நூறும் விட்டது
கூட்டு பதினொன்றை யும் (34)

ஆயிரக்க ணக்கில் குதிரைகளும் பாவியும்
பாய்ந்து திரட்டிய யானைகளும் --- நாயாம்
அரவாணி கொள்ளையிட்டான் தாழ்ந்ததரம் ஐயோ
மறவன் மறைந்தது எங்கு (35)

எழுதியவர் : பழனி ராஜன் (17-Oct-19, 8:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 109

மேலே