தாய்மொழி காப்போம்

அம்மொழி இம்மொழி புத்துயிர் கண்டேன் - யாவும்
எம்மொழி பைந்தமிழ் புறம் என்பேன்...
உயிர்ஊற புகழ்சேர ஆவல் கொண்டேன் - தாயின்
செம்மொழி செந்தமிழ் நாச்சுவை உண்பேன்...
இருபது ஆயிரம்கால் கொண்ட அன்னை - அவள்
காலூன்ற செந்நீர்கண் சொட்டுகிறாள் அல்லோ...?
பேறுகாண் பார்குடில் கொடியாண்ட மொழிதனை - ஆசை
மனமாற கடமை உறுதியேற்ப தல்லோ...?
சிறுஞ்சிட்டு நாவில் தேன்சொட்டும் தமிழில் - உரை
உய்த்தல் உன்னதம் காத்தல் ஆகுமே...!
வெண்பட்டு உடுத்தி மைபொட்டு பொருத்தி - ஊர்
ஊராய் தாய்தமிழ் தென்றாலோடு போகுமே...!
அருஞ்சுவடி தமிழ்ச்சோலை பொழிவாக்க கண்டம் - மக்கள்
மகிழ தனிமொழி தரணிஆரம் கோர்ப்பேன்...!
பெருந்தமிழ் போற்றும்நாளை எனதாக்க முண்டம் - பிய்த்து
நிலம்வீழ என்தாய் தமிழ்மொழி காப்பேன்...!

எழுதியவர் : ஹரிஹரன் (14-Oct-19, 10:46 pm)
சேர்த்தது : IVK Hariharan
பார்வை : 1312

மேலே