மௌனத்தின் வேர்கள்
மௌனத்தின் வேர்களை
மெல்ல தீண்டிய சலனமாய்
அழுகையின் ஒவ்வொரு
விசும்பலுக்கும் புதுப்புது காரணங்களை
பட்டியலிட்டு தன்னை தேற்றிக்கொள்ள
முயற்சிக்கும் மனது
இன்று ஏனோ கைகட்டி வேடிக்கை
பார்க்கிறது தண்ணீர் தீர்ந்துபோன
குளத்தை சுற்றிவரும் வெண்கொக்குபோல்...
கண்ணீரின் சுவடுகளை
தாங்கிக்கொண்டிருக்கும் கன்னங்களை
சுமைதாங்கியாய் உயர்த்திப்பிடித்தபடி...
சலனமில்லாது தனிமையில் உழன்றபடி...
தூக்கத்திலும் நிறைவாய் சிந்தித்தபடி.....