மனைவி

காதோரம் கதை சொல்லிப்போகிறது
கால நதி
விடுபட்ட பட்டமாய்
விசும்புகிறது நெஞ்சுரம்
கோலமிட்ட கொலுசுகள்
கோசமிட.....
வீண்பேச்சு பேசி
விதண்டாவாதம் செய்யாது
தவமிருந்தான் தனையன்
தகழி உடைந்து
தாளம் போடும் ஓசை கேட்டு
தன்னை மறந்து தவம் கலைத்து
தாயே என்றான்.....
.......
யோகராணி கணேசன்
04.ஆவணி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (20-Sep-19, 8:10 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
Tanglish : manaivi
பார்வை : 6108

மேலே