கவிஞர் நெட்டா

இலக்கிய மாத இதழ் வெளியிடும் அலுவலகத்தில் ஒரு எழுத்தாளர் அந்த இதழின் ஆசிரியருக்கு எதிரே அமர்ந்திருக்கிறார்.

அந்த இதழின் ஆசிரியர்: தம்பி, உங்க பேரு என்ன?

நடராஜன் ஐயா.

உங்க கவிதைகளைப் படித்தேன். அருமையான கவிதைகள். இதுவரை இந்தக் கவிதைகளில் எதையாவது இலக்கிய இதழ்களில் வெளியிட்டிருக்கிறீர்களா?

இல்லைங்க ஐயா.

உங்கள் கவிதைகளை எங்கள் 'விடியல் இலக்கிய இதழ்'லில் வெளியிட இருக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு கவிதை. நடராஜன் என்ற பெயரில் உங்கள் கவிதைகளை வெளியிட்டால் சிறப்பாக இருக்காது. உங்களுக்கு ஒரு முறை பெயர் தேவை. நீங்கள் உங்களுக்குப் பிடித்த புனை பெயர் ஒன்றைச் சொல்லுங்கள். அச்சிடும் போது அந்த புனை பெயருக்கு முன்பு 'கவிஞர்' என்று அச்சிடுவோம்.

ஐயா எனது சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள நெட்டப்பாக்கம். நான் பிறந்து, வளர்ந்து, வாழும் ஊர். நான் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவன். எங்கள் நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்கிறேன். ஓய்வு நேரங்களில் கவிதை எழுதுகிறேன். என் ஊரின் நினைவாக 'நெட்டா" என்ற புனைபெயரில் என் கவிதைகளைப் பதிவிடுங்கள் ஐயா.

நல்லது தம்பி. இன்று முதல் நீங்கள் 'கவிஞர் நெட்டா'. தொடர்ந்து எழுதுங்கள். பின்னர் உங்கள் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறோம். இதுவரை கவிதைகளுக்காக புதுவையைச் சேர்ந்த யாரும் 'சாகித்ய அகாதமி' பரிசு பெற்றதில்லை. நீங்கள் விரைவில் அப்பரிசைப் பெற வாழ்த்துகிறோம்.

மிக்க நன்றி ஐயா. என் வாழ்வில் இந்நாள் பொன் நாள்.

எழுதியவர் : மலர் (5-May-22, 7:11 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 46

மேலே