இரவுக்கும் இரவுக்கும் திருமணம்

என்னடா மச்சி கையில் திருமண அழைப்பிதழை வச்சிருக்கிற.‌ யாருக்குத் திருமணம்?
@@@@@
இன்னும் பார்க்கலடா. இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன். மேசை மேலே இந்த அழைப்பிதழ் இருந்தது..
@@@@@
சரி. அதைக் கொடு பார்க்கிறேன்.
(திருமண அழைப்பிதழில் உள்ள மணமகன், மணமகள் பெயர்களைப் படித்துப் பார்த்தவுடன்) டேய் மச்சி, உலக அதிசயம் நடக்குதா.
@@@@@@
என்னடா சொல்லுற?
@@@@@@
திருமணம் செய்யத் தகுதியானவங்க யாருடா?
@@@@@
சட்டப்படி திருமண வயதை அடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் அல்லது கணவனை இழந்த பெண்ணுக்கோ அல்லது மனைவியை இழந்த ஆணுக்கோ திருமணம் நடக்கும். ஆனா இந்த அழைப்பிதழ்படி.......
@@@@@@
அழைப்பிதழ்படி... என்னடா சொல்லுற?
@@@@@£
இந்த அழைப்பிதழில் மணமகனும் இரவு. மணமகளும் இரவு. அதாவது இரவுக்கும் இரவுக்கும் கல்யாணம்.
@@@@@@
என்னடா குழப்பற?
@@@@@@@
மணமகன் பேரும் மணமகள் ‌‌பேரும் இந்திப் பேருங்க. இரண்டு பேருங்களுக்கும் 'இரவு'னு அர்த்தம்டா.
@@@@@@
அட, அப்பிடியா. ஆச்சரியமாக இருக்குதே.
@@@@@@
அந்த இருட்டுப் பேருங்களச் சொல்லுடா மச்சி.
@@###
மணமகன்: ரஜனி. மணமகள் : நிஷா‌.
(ரஜினி என்ற பெயருக்கு அர்த்தம் இல்லை. அந்தப் பெயரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் கே. பாலச்சந்தர்).
@@@@#@
ஓ... அதுதான் நீ "இரவுக்கும், இரவுக்கும் திருமணம்"னு சொன்னியா?
@@£@@£
திருமணம் நடந்தபிறகு அந்தப் பேருங்களுக்கான அர்த்தத்தை மணமக்களிடம் சொன்னாப்‌ போதும் அதிர்ச்சியாகி அவுங்க பேருங்களக் கண்டிப்பா மாத்தி வச்சுக்குவாங்க.

@@@@@@@@£@@@@##@@@@@@@@@@@
Rajani = night
Nisha = night
இண்டியாசைல்ட்நேம்ஸ்டாட்காம்

எழுதியவர் : மலர் (12-May-22, 3:45 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 122

மேலே