ஏதிலியாய்

மௌனங்களை தூவலிட்டு
நினைவுகளின் முற்றத்தில்
நீந்திக்கொண்டிருக்கிறாய்-நீ!!

வரன்முறை மறந்து
வழக்கொழிந்து போன
வார்த்தைகளை
மீட்டெடுக்கிறேன்-இங்கு
உனக்காக நான்!!

வெகுநேரங்களில்
மனம்கூடி கனக்கிறது
கற்பனைகளால்ஆன
நமது பயணத்தின் தொடர்ச்சியில்!!

இக்கணமே
பூமி சுழற்சியை
நிறுத்திக்கொண்டாலும்
நினைவுகளுடன்
நீளும்
நம் பயணத்தில்
நான் மட்டும்
இங்கே
ஏதிலியாய்!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (21-Apr-22, 12:20 am)
பார்வை : 386

மேலே