நினைவுகள்

இப்போதெல்லாம்


கனவில் தோன்றும்
காடுகளின்
அருவிகளில்
என் கால்கள்
தடம் பதிப்பதில்லை ..


நெடுநீண்ட
அலைகளில்
துள்ளும் மீனைக்
என் கைகள் தொட
நினைப்பதில்லை...


தனிமைநிரம்பிய
அறையாயினும்
துருப்பிடித்த
சாரளத்தின்
சந்தில்
சிலந்தியின்
சிறு தாவுதலை
ரசிக்க மனமில்லை...


றெக்கை முளைத்த
சிறுபறவையின்
சினுங்கள்கள்
என்
செவிதீண்டுவதில்லை...


பக்கத்து
வீட்டைநோக்கி
வளரும்
என் செடிகளை
பத்திரப்படுத்த முடியவில்லை...

மறக்கவேண்டும்
என
மனத்திரையிட்ட
முத்திரைகள்
யாவுமே
நினைவுகளின்
நிழலாய்
தொடர்வதால்......

எழுதியவர் : இரா.சுடர்விழி (21-Apr-22, 12:18 am)
Tanglish : ninaivukal
பார்வை : 690

மேலே