அம்மா அருகினில்
அம்மாவிடம் அடிக்கடி
சண்டை போட்டதுண்டு.,
அக்காவிடம் தான் அதிக பாசமென்று
அவளுக்கே அனைத்திலும்
முன்னுரிமை என்று.,
பல நேரங்களில் மனக்கசப்புகள் பதிந்த துண்டு
தின்பண்டம் தொடங்கி திருமணம் வரை
எத்தனையோ கேள்விகள்
விடைகளற்று விக்கித்து நின்றதுண்டு.,
அம்மாவின் அன்பை உணர்வதில் தான்
எனக்கு எத்தனை சிக்கல்
அம்மா எனக்கு அருகினில்
இருக்கும் போதே தூரமாக தெரிந்தார் .,
காலம் ஓடியது ...
இப்போது அம்மா
எல்லாவற்றையும்
என்னுடன் தான் பகிர்ந்து கொள்கிறார்
அக்கா போன் செய்யவில்லை
என புலம்புவதும் என்னிடம் தான்.,
இப்போது அம்மா அருகினில்
நான் தான் பல ஊர்கள் தாண்டி
தொலைவினில் ..
அன்புடன் ஆர்கே ..