அம்மா என்றால் சும்மாவா

அம்மா என்றால் சும்மாவா

அம்மா என்றால் சும்மாவா;
அம்மா என்றால் அன்னை தான்;
கருவில் சுமந்த தாய் அவள்
கருத்தாய் என்னை வளர்த்த தெய்வம் அவள்;
அப்போதும் இப்போதும் எப்போதும் என் அம்மா எனக்கே அம்மா தான்;

அன்பின் வடிவம் அவள்தான்;
பாசத்தை பொழியும் பாசமழை அவள் தான்;
பசியைப் போக்கும் மந்திர சக்தியே அவள்தான்;
கற்பூரமாய் எரிந்திடுவாள்;
கண் இமையாய் என்னை காத்திடுவாள்;
சுய நலத்தோடு தூய தாய் பாசத்தை சுரந்திடுவாள்;
சுகமாய் என்னை மடியில் கிடத்திடுவாள்
என்னுள் வாழ்பவள் என் அம்மா;
எனக்காகவே வாழ்பவள் என் அம்மா;
என்றென்றும் மாறாத பாசத்தையே சுமப்பவள்;
தன் மகனே/மகளே எல்லாவற்றிரும் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பும், சுயநலவாதி அவள்;
மண்ணினுள் போகும் வரை,
எனக்காகவே வாழ்கின்றாள்;
மண்ணில் பிறந்த ஜீவனிலே உயர்ந்தது
அம்மா உறவன்றோ;
சொக்கத்தங்கம் அவள்;
சொர்கத்தை பாசத்தில் சுமப்பவள்;
சொக்கி வீழுந்தால் சுகமாய்
மடியில் போட்டு உறங்க வைத்தவளும் அவள் அல்லவா;
என் குரல் கேட்ட உடன் துடித்து ஓடிவருவது
எந்தன் தாயல்லவோ

என்றென்றும் மாறாத பாசத்தையே சுமப்பவள்;
கண்ணாய் காத்த காவல் தெய்வம் அவள்;
கண்கண்ட கருணை தெய்வமே அவள்;
கசியும் பாசத்தால்
வசியம் செய்தவள்;

அம்மா அம்மா என்றால் அன்னையல்லவா;
சும்மா சும்மா இருக்காது;
துடி துடிப்பது அவள் சரீரம் அல்லவா;
அணைக்கும் அவள் கரங்கள் சுகம் தான் அல்லவா;
தாயாய் எனக்கு வந்தது,
சேயாகிய எனக்கு கிடைத்த வரம் அல்லவா;
நெஞ்சோடு நெஞ்சாக நேசக்கரம் கொண்டு தூக்கி அள்ளி அணைத்தாள்;


அம்மா; அம்மா;
அவள் அன்புச் சோலை அல்லவா;
அம்மா அம்மா அவள் என் ஆருயிர் அம்மா;
சும்மா சும்மா இல்லாமல்
சும்மா சும்மா ஏன்னை சுற்றி சுற்றியே வருவாள்;
சுற்றும் உலகமே நான் என்பாள்;
சுகமாய் அன்னை மார்பில் உறங்கி,
சுற்றியே வருவதே சொர்க்கம் அல்லவா;
அம்மா இல்லாமல் அகிலம் இல்லை,
அன்புச் சுரங்கமே அவள் அல்லவா,
அன்னை சீலையைப்பிடித்து
நடந்து வருவதே பெருமிதம் அல்லவா;

சாமியைப் பார்த்ததில்லை;
சாஞ்சி அவ இளைப்பாரியதை நான் பார்த்ததில்லை;
தாங்கியே தூங்க தாளாட்டிய அவள்
தூங்கி நாளாச்சி;

பூமி நம்ம சுமந்தாலும்,
பூவாக என்ன சுமந்த சாமி அவ;
பெத்தது அவள் அல்லவா;
பிள்ளையாய் அவளுக்கு நான் பிறந்தது
நான் செய்த பாக்கியம்.

உயிர்பிச்சை போட்டு
உலகுக்கு என் உடலை கொண்ட வந்த உத்தமி அல்லவா;
பசி என்ற ஒன்று வருமுன்னே
பதறி பட பட என்று துடித்து;
சுவையாய் உணவை ஊட்டுபவள் அவளல்லவா;
பாசத்தில் மழுங்கிய
பத்தாம் பசலி அவள்;
பிள்ளை பாசம் ஒன்றே போதும் என்று
பித்தாய் என்னை சுற்றி வந்த பைத்திய தேவதை அவள்;

அம்மா என்றால் அவள்தான்;
சும்மா சும்மா இல்லாம சுகத்தை தந்தது நீ அல்லவா;

பசி என்றால் துடிக்கின்றாய்;
பிணி என்றால் நொந்தே வெந்து விடுகின்றாய்;
நோவை போக்க நோம்பு இருந்திடுவாய்;
நோயற்ற வாழ்வு வாழ தெய்வத்திடம் முறையிடுவாய்;
என் அம்மாவின் பாசம் அப்படியே மணக்கும்;
சும்மா இருக்காத பாசம்;
சுகம் கொடுக்கும் இந்த பாசம்;
பாச வலை வீசினாள்,
பசிக்கு உணவு ஊட்ட,
பால் நிலவையும் அழைத்துவிட்டாள்,
பாய்ந்தோடும் அன்னையின் பாசம்,
பயம் அறியாதது அந்த பாசம்;
பார்த்து பார்த்து வளர்த்த என் அன்னையின் பாசம்;

அம்மா என்றால் அதிசயம் தான்;
அம்மா என்றால் ஆச்சரியம் தான்;
அம்மா என்றாலே இன்பம் தான்;
அம்மா என்றாலே ஈரம் தான்;
அம்மா என்றால் உருக்கம் தான்;
அம்மா என்றாலே உயிர் ஓட்டம் தான்;
அம்மா என்றாலே எப்போழுதும் குதூகலம் தான்
அம்மா என்றாலே ஏக்கம் தான்;
எடுக்கும் நற்பாசம் தான்;
அம்மா என்றாலே ஐக்கியம் தான்;
அம்மா என்றாலே ஒய்யாரம் தான்;
அம்மா என்றாலே உயிர் ஓட்டம் தான்;
அம்மா என்றலே உயிர் ஓவியம் தான்;
அவ்வியம்(வஞ்சனை) இல்லாத பெறுமைதான்;
அம்மா என்றாலே நமக்கு ஓவியம் (சிறப்பு) தான்;
அம்மாவின் வாழ்க்கையே காவியம்
அம்மாவின் இதயம் அரும் பாசக் களஞ்சியம் தான்;
துடிக்கும் இதயம் அது, துதிபாடும் உள்ளமது;
நடிக்கத்தெரியாது;

அம்மா என்றால் அம்மா தான்;
என் அணுக்கள் ஒவ்வொன்றிலும் குடியிருக்கும்
அன்புத்தாய் அவளே தான்;

அவளிடம் பட்ட, பெத்த கடனை தீர்க்க
அடுத்தப் பிறவியில்
அவளுக்கே அம்மாவாய் பிறக்கவேண்டும்;

அன்னையை உதாசீனம் செய்யாதே;
அவள் அன்பை நீயும் கொச்சைப்படுத்தாதே;
தாய்மையை மதிப்போம்;
தூய பாசத்தை துதிப்போம்;
அம்மாவை மதிப்போம்;
அனுதினமும் துதிப்போம்

அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (10-Apr-22, 5:01 pm)
பார்வை : 879

மேலே