அடா சடா

வாடி செவத்த பொண்ணு. சிம்முலாவில பொறந்து வளர்ந்து நல்லா செவப்பா வெள்ளைக்காரி மாதிரியே இருக்கிறயே. இந்தப் பாட்டியைப் பாக்க இவ்வளவு நாளு ஆச்சா? உம் பேரு என்னடி செவத்த சிங்காரி?

எம் பேரு அடா (Adah) பாட்டி.

அடடா அடா. உம் நல்ல பேரு டி. உம் பேரைக் கேக்கறவங்க எல்லாம் "அடடா, அடா"னுதான்டி சொல்லுவாங்க.

எந்த தங்கச்சி பேரு என்னவா இருக்கும்னு சொல்லுங்க பாட்டி பார்க்கலாம்.

உம் பேரு அடா. உந் தங்கச்சி பேரு சடா.
இதுகூட என்னால் சொல்லமுடியாதா அடடா அடா.

சரியாகச் சொன்னீங்க பாட்டி. எம் பேருக்கு அர்த்தம் இருக்குது. அவ பேருக்கு அர்த்தம் இல்லை ‌‌


இந்திப் பேருக்கெல்லாம் யாருடி அர்த்தம் பாத்து பேரு வைக்கிறாங்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Adah = adornment. Biblical, Hebrew origin

எழுதியவர் : மலர் (11-May-22, 4:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 55

மேலே