Mahesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Mahesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Apr-2022
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  5

என் படைப்புகள்
Mahesh செய்திகள்
Mahesh - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2022 3:37 pm

வானில் ஒரு கருமேகக்கூட்டம் ....
அன்னாந்து பாக்கையிலே....
துளி துளியாய் விழுந்தன முத்துக்கள் ….
அவை வெறும் முத்துக்கள் அல்ல ….
வான்மேகத்தின் செல்ல பிள்ளைகள்….
அப் பிள்ளைகளின் பெயர் தான் மழை….
பிள்ளையை பூமி தாயிடம் வர விடாமல் தடுக்கிறான் இடி என்ற எதிரி ....
பூமி தாயிடம் வர விடாமல் தடுக்க காற்று கூட சதி செய்யும் …
அதையும் மீறி அப் பிள்ளை வரும் ….
தாயின் மனதில் உள்ள காயத்தை ஆறாத ரணத்தை ஆற்றவும் ...
மனதையே குளிர வைக்கவும் மழை என்ற பிள்ளையாய்....

மேலும்

சிறப்பு சகோ 08-Sep-2022 6:14 pm
நன்றி 20-Aug-2022 3:03 pm
சிறப்பு. 19-Aug-2022 10:45 pm
Mahesh - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2022 9:00 am

கட்டுக்கடங்காமல் வரும்
எனது கோபங்களை
ஆத்திரங்களை
எரிச்சல்களை
குதர்க்கங்களை
அவதியால் வரும் வசவுகளை
திமிர் பிடித்த வார்த்தைகளை
நின்று பெற்றுக்கொண்டு

அதை வலிக்காது
ஊதிப்புடைத்து சலித்து
கையளவு காதலை மட்டும்
தேன் போல் எடுத்து
என்னை கடந்துசெல்லும்

உன்னை பார்க்கப்பார்க்க
பொறாமை...

மேலும்

அமர்க்களம். 19-Aug-2022 10:43 pm
' உன்னை பார்க்க பார்க்க என்னுள் கொழுந்தெறியும் கோபத்த் தீ அடங்கி அணைகிறது' இப்படி நான் எழுதி இருப்பேன் ஆனால் நீர் ஸ்பரிசன்.......உமது பாணி தனிப்பாணி நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் 19-Aug-2022 10:30 am
Simply awesome.....u discribed well 19-Aug-2022 9:22 am
Mahesh - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2022 6:32 pm

காட்டைப்போல் விரியும்
தன் மனதுக்குள் ஒளிந்து
கனவுக்குள் குதித்தவள்
பூக்களில் மோதி
உயிரிழந்து போனாள்.

எங்கு திரும்பினாலும்
போன பாதையில் திரும்பியதும்
வந்த பாதையே வருகிறது
என்றவளின் காலில்
ஒட்டிக்கிடந்தது நரகம்.

கண்களை விழிக்க வைத்த
கனவுதனை பிரித்து பார்க்க
ஒலியின்றி தெரிந்த என்
முகத்தில் இறந்திருந்தது
அவளின் எதிர்காலம்.

ஒளியை உணர்வால்
எரித்துக்கொண்டிருக்கும்
விளக்கிலிருந்து வெளியேறும்
வண்ணத்துப்பூச்சியின் நிழல்.

நிழலின் முகத்தை நான்
மறைக்க மறைக்க
ஆவியாகிறது கண்ணீரின்

மேலும்

மிக்க நன்றி வாசிப்புக்கு.... 20-Aug-2022 6:56 pm
ஒளியை உணர்வால் எரித்துக்கொண்டிருக்கும் விளக்கிலிருந்து வெளியேறும் வண்ணத்துப்பூச்சியின் நிழல். அருமையான வரிகள் .... 20-Aug-2022 2:49 pm
இப்படி எழுதியே எனக்கு பழக்கம் ஆகி விட்டது. இதுவும் தமிழுக்கு அழகும் பொருளும் சேர்த்தால் நல்லது என்றுதான் தோன்றுகிறது. உங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றிகள் 20-Aug-2022 2:31 pm
கொஞ்சம் புரிய கொஞ்சம் புரியாது கொஞ்சம் இங்கும் அங்கும் புரிவதுபோல் இருக்கிறது உங்கள் வரிகள் இன்னும் ஏன் எத்தனை நாள் இப்படியே எழுதப் போகிறீர் கொஞ்சம் பாமரரும் புரிந்து ரசிக்கும் படி இதையே கொஞ்சம் மாற்றி எழுதுவீரோ ஸ்பரிசன் 20-Aug-2022 1:33 pm
Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
15-May-2022 3:07 pm

மூங்கில் வேலி தாண்டியும்....
அடர்ந்திருக்கின்றன...
பெருமரக்கிளைகள்!

வலிந்து திணிக்கப்பட்ட...
அத்தியாயங்கள்....
வேகமாய்க் கடந்து போகின்றன..
வலி கலந்து!

மர நிழலைக் கபளீகரம் செய்கிறது..
ஏதோ ஓர் கோடாரி!

கூடுகள் கலைந்த பறவைகள்...
பறந்தபின்...
மரக்கதவு திறந்து...
மரக்கட்டில் சாய்கையில்....
சீரான உறக்கம் பிடிக்கிறது!

மரத்துப்போன மனம்...
தோற்றுப்போகிறது...
மர நிழலின்றி!
............

மேலும்

Mahesh - MEHGA அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2013 9:07 pm

நான் எழுதிய மிக சிறந்த கவிதை
உன் பெயர்.....

மேலும்

Super. 10-May-2022 5:35 pm
Mahesh - Mahesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2022 6:32 pm

நேற்று கேட்ட.....
ஒரு கதையில்....
நண்பரின்....
கொள்ளுத்தாத்தா...
கோடீஸ்வரராக இருந்தார்!
தாத்தாவும்...
அவ்வாறே வாழ்ந்தார்!
ஆனால் தந்தை மட்டும்....
ஏமாற்றப்பட்டு....
ஏழையானார்!
இவரும் அவ்வாறே!

இக்கதையில்
லயிக்க மறுத்தது...
மனம்!

ஏனெனில்....
இது போன்ற கதைகள்...
ஏராளமாய்
உலவிக் கொண்டிருக்கின்றன....
அவனியெங்கும்!

என்னிடமும்....
இவ்வாறான...
ஒரு கதை உள்ளது!

பழம்பெருமைக் கதைகள்....
பறை சாற்றுகின்றன....
அக்காலப் பெருமைகளையும்....
கதை சொல்வோரின்....
முயற்சி...
இன்மையையும்!
............

மேலும்

Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2022 6:32 pm

நேற்று கேட்ட.....
ஒரு கதையில்....
நண்பரின்....
கொள்ளுத்தாத்தா...
கோடீஸ்வரராக இருந்தார்!
தாத்தாவும்...
அவ்வாறே வாழ்ந்தார்!
ஆனால் தந்தை மட்டும்....
ஏமாற்றப்பட்டு....
ஏழையானார்!
இவரும் அவ்வாறே!

இக்கதையில்
லயிக்க மறுத்தது...
மனம்!

ஏனெனில்....
இது போன்ற கதைகள்...
ஏராளமாய்
உலவிக் கொண்டிருக்கின்றன....
அவனியெங்கும்!

என்னிடமும்....
இவ்வாறான...
ஒரு கதை உள்ளது!

பழம்பெருமைக் கதைகள்....
பறை சாற்றுகின்றன....
அக்காலப் பெருமைகளையும்....
கதை சொல்வோரின்....
முயற்சி...
இன்மையையும்!
............

மேலும்

Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2022 3:26 pm

பல வருடங்கள்....
குடியிருந்த....
பக்கத்து வீட்டுக்காரர்....
காலி செய்து போனார்!

அந்த...
இருசக்கர வாகன
மெக்கானிக் கடை....
மூடப்பட்டுவிட்டது!

தெரிந்த...
டீக்கடை சிறுவன்...
சொந்த ஊர்...
சென்றுவிட்டான்!

தினசரி நடைபயிற்சியில்....
புன்னகைக்கும் நண்பர்.....
நெடு நாட்களாய்...
தென்படவில்லை!

அலுவலகத்திலிருந்து...
மாற்றலாகிப் போகிறவர்....
கரம் நீட்டுகிறார்...
விடைபெற!

தற்காலிகமே...
நிரந்தரமாய்....
புரிந்தும் புரியாமல்...
நிற்கின்றன...
மீளாத நினைவுகளில்!

எனில்...
வாழ்வியல் மாற்றங்கள்....
மாறாமல்.....
வழங்கிக் கொண்டிருக்கின்றன....
சிலருக்கு

மேலும்

நன்றி சகோ💐💐💐💐 05-May-2022 9:19 pm
மிகவும் சிறப்பான வரிகள்! தொடருங்கள் உங்கள் எழுத்து ( கவிதை) பயணத்தை! வாழ்த்துக்கள்!! 💐💐🌷🌷 21-Apr-2022 9:11 pm
Mahesh - Mahesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2022 4:44 pm

அந்த இனிப்புக்கடையில்...
இனிப்பு வாங்குகையில்....
அவ்வப்போது....
அருகாமை...
அடகுக்கடையில்...
சில பெண்கள்...
கவலை தோய்ந்த..
கண்களுடன்....
நகைகளை அடகுவைப்பதை...
கண்டு கலங்குகிறேன்!

அடகுவைத்த நகைகள்....
இனி மீளுமா
தெரியாது!
அவர்கள் சூழல்...
மாறுமா தெரியாது!

ஆனால்...
இனி....
அந்த இனிப்புக்கடையில்..
இனிப்பு வேண்டாமென....
முடிவெடுக்கிறது மனம்!
.....

மேலும்

வாழ்க்கையின் வலிகள்!! சிறப்பான கவிதை!! 22-Apr-2022 2:29 pm
Mahesh - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Apr-2022 4:44 pm

அந்த இனிப்புக்கடையில்...
இனிப்பு வாங்குகையில்....
அவ்வப்போது....
அருகாமை...
அடகுக்கடையில்...
சில பெண்கள்...
கவலை தோய்ந்த..
கண்களுடன்....
நகைகளை அடகுவைப்பதை...
கண்டு கலங்குகிறேன்!

அடகுவைத்த நகைகள்....
இனி மீளுமா
தெரியாது!
அவர்கள் சூழல்...
மாறுமா தெரியாது!

ஆனால்...
இனி....
அந்த இனிப்புக்கடையில்..
இனிப்பு வேண்டாமென....
முடிவெடுக்கிறது மனம்!
.....

மேலும்

வாழ்க்கையின் வலிகள்!! சிறப்பான கவிதை!! 22-Apr-2022 2:29 pm
மேலும்...
கருத்துகள்

மேலே