மாற்றம்

பல வருடங்கள்....
குடியிருந்த....
பக்கத்து வீட்டுக்காரர்....
காலி செய்து போனார்!

அந்த...
இருசக்கர வாகன
மெக்கானிக் கடை....
மூடப்பட்டுவிட்டது!

தெரிந்த...
டீக்கடை சிறுவன்...
சொந்த ஊர்...
சென்றுவிட்டான்!

தினசரி நடைபயிற்சியில்....
புன்னகைக்கும் நண்பர்.....
நெடு நாட்களாய்...
தென்படவில்லை!

அலுவலகத்திலிருந்து...
மாற்றலாகிப் போகிறவர்....
கரம் நீட்டுகிறார்...
விடைபெற!

தற்காலிகமே...
நிரந்தரமாய்....
புரிந்தும் புரியாமல்...
நிற்கின்றன...
மீளாத நினைவுகளில்!

எனில்...
வாழ்வியல் மாற்றங்கள்....
மாறாமல்.....
வழங்கிக் கொண்டிருக்கின்றன....
சிலருக்கு இன்பத்தையும்
பலருக்கு வலியையும்!
......

எழுதியவர் : மகேஷ் (17-Apr-22, 3:26 pm)
சேர்த்தது : Mahesh
Tanglish : maatram
பார்வை : 136

மேலே