VETTIYAAN YRANSFORMATION
விறகு வெட்டி
விறகு வெட்டி கொண்டு
குவித்தான்
வெட்டியான் அடுக்கி
சிதை அமைத்தான்
காத்திருந்தான் காத்திருந்தான்
ஒரு உடல் கூட வரவில்லை
ஊரில் வியாதி இல்லை
வெக்கை இல்லை
சாவும் இல்லை
விறகை எல்லாம் கொண்டுபோய்
கடை வைத்து விற்றான்
ஊர் மக்கள் சோறு பொங்கி
சாப்பிட்டு மகிழ்ந்தனர்
அப்பன் வெட்டியானுக்கு
புத்தி சொன்ன
புன்னகையாள் நீதானே ?