யார் கண் பட்டதோ?

💔💔💔💔💔💔💔💔💔💔💔

*யார் கண் பட்டதே ?*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💔💔💔💔💔💔💔💔💔💔💔

அன்பே!
என் தினங்கள்
உன் நினைவுகளைத் தின்றே!
பசியாற்றுகிறது....

என் கண்ணீரைக் குடித்தே!
தாகம் தீர்க்கிறது.....

உன் பிரிவுக்குப் பின்
என் உறக்கம்
விழித்தே! இருக்கிறது .....

என் வாழ்க்கை
முகவரி இழந்த
கடிதமாக மாறிவிட்டது .....

எல்லா காயங்களில் இருந்தும்
குருதி வரும்
காதல் காயங்களில் மட்டும்
கவிதையே! வருகிறது ....

யார் கண்பட்டதோ ?
நம் இருவரையும்
பிரித்துவிட்டது காலம்...

நம்முடைய
இறந்த காலத்திலேயே !
என் நிகழ்காலம்
முடிந்துகொண்டிருக்கிறது....

நீ ஒளி
நான் இருள் என்று தெரிந்தும்
காதல்
நமக்குள் உருவானது
யார் செய்த குற்றமோ...?

*கவிதை ரசிகன்*


💔💔💔💔💔💔💔💔💔💔💔

எழுதியவர் : கவிதை ரசிகன் (7-Nov-24, 10:06 pm)
பார்வை : 38

மேலே