நிழல்

மூங்கில் வேலி தாண்டியும்....
அடர்ந்திருக்கின்றன...
பெருமரக்கிளைகள்!

வலிந்து திணிக்கப்பட்ட...
அத்தியாயங்கள்....
வேகமாய்க் கடந்து போகின்றன..
வலி கலந்து!

மர நிழலைக் கபளீகரம் செய்கிறது..
ஏதோ ஓர் கோடாரி!

கூடுகள் கலைந்த பறவைகள்...
பறந்தபின்...
மரக்கதவு திறந்து...
மரக்கட்டில் சாய்கையில்....
சீரான உறக்கம் பிடிக்கிறது!

மரத்துப்போன மனம்...
தோற்றுப்போகிறது...
மர நிழலின்றி!
............

எழுதியவர் : மகேஷ் (15-May-22, 3:07 pm)
சேர்த்தது : Mahesh
Tanglish : nizhal
பார்வை : 95

மேலே