லதா சேகர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  லதா சேகர்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  21-Apr-2022
பார்த்தவர்கள்:  113
புள்ளி:  4

என்னைப் பற்றி...

நான் ஒரு குடும்ப தலைவி.

என் படைப்புகள்
லதா சேகர் செய்திகள்
லதா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2022 10:55 pm

"இப்போ ஏன்பா நம்ம வீட்ட விக்கணும்?" புரியாமல் கொஞ்சம்
குழப்பமான தொனியில் கேட்டான்
சதீஷ்.
" ஆமாம் டா. இன்னும் எவ்வளவோ
செலவு இருக்கு".
" அதுக்கென்ன நம்மகிட்ட பணமா
இல்ல? எவ்வளவு செலவானாலும்
நான் உடனே அனுப்பறேன்."
" சரி தான். நீ அனுப்புவ. நாளைக்கு
உம்புள்ளைக்கு சேத்து வைக்க
வேணாமா?"
" அப்பா அவன் இப்போதான் எல்கேஜி. நீங்க என்ன பா இவ்வளவு
பிடிவாதம் பிடிக்கறீங்க?"
" த பாரு..! என்னால யாருக்கும்
எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது ன்னு நெனைக்கிறேன். அதுவும் போக மொதல்ல மாதிரி ஆறு தென்னைமரம், நெல்லிக்காய் மரம்,
பவளமல்லி, தோட்டம் ன்னு ஓடி ஓடி
தண்ணீர் ஊத்தி யார் பாத்துக்கறது?
எனக்கு ஒண்ணும் வீட

மேலும்

வணக்கம் லதாம்மா... உங்களின் வீடு. அருமை.... இந்த மாதிரி பிள்ளை கிடைக்க கொடுத்துவைத்திருக்கணும். கஷ்டங்கொடுக்கக் கூடாது என்கிற மனோபக்குவத்தில் எத்தனை அப்பாக்கள் ? கண்முன் கொண்டுவந்ததற்கு நன்றி. தொடருங்கள். 04-May-2022 9:47 pm
லதா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2022 7:22 am

பிறந்த வீடு

இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து
பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தாள் ரேவதி. வாடகை காரில்
இருந்து இறங்கியதும், அந்த தெருவில் உள்ளவர்கள் அவளை
ஆச்சரியமாக பார்த்த போது,
அவர்களைப் பார்த்து பொதுவாக
சொன்னாள் "இது வாடகை கார் தான்
சீக்கிரமா சொந்த கார் வாங்கிடு வேன்" என்று. யாரும் பதில்
பேசவில்லை.

ஒரு மூதாட்டி மட்டும் "சரி கண்ணு.
நீ நல்லபடியா இருந்தா சந்தோசம் தான், உள்ள போய் உங்கண்ணிய
பாரு" என்றார்.

தான் பிறந்த வீட்டை கண்களால்
அளந்து படியே உள்ளே சென்றாள்.
அண்ணனின் மகன் அருகில் வந்து
"வாங்க அத்த. எப்படி இருக்கீங்க?"
என்னவனை ஏற இறங்க பார்த்து விட்டு பதிலேதும் சொல்லாம

மேலும்

உண்மையான கதை. மிகவும் நேர்த்தியான வடிவமைப்பு. மிகவும் சிறப்பு சகோ💐💐💐💐💐💐💐. 23-Apr-2022 8:18 am
லதா சேகர் - Mahesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Apr-2022 4:44 pm

அந்த இனிப்புக்கடையில்...
இனிப்பு வாங்குகையில்....
அவ்வப்போது....
அருகாமை...
அடகுக்கடையில்...
சில பெண்கள்...
கவலை தோய்ந்த..
கண்களுடன்....
நகைகளை அடகுவைப்பதை...
கண்டு கலங்குகிறேன்!

அடகுவைத்த நகைகள்....
இனி மீளுமா
தெரியாது!
அவர்கள் சூழல்...
மாறுமா தெரியாது!

ஆனால்...
இனி....
அந்த இனிப்புக்கடையில்..
இனிப்பு வேண்டாமென....
முடிவெடுக்கிறது மனம்!
.....

மேலும்

வாழ்க்கையின் வலிகள்!! சிறப்பான கவிதை!! 22-Apr-2022 2:29 pm
லதா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2022 10:34 am

கூடத்தில் இருந்த ஃபோன் அலறிக்கொண்டே இருந்தது. பிள்ளைகளை அனுப்பி விட்டு
கணவனுக்கு தேவையானதை
எடுத்து வைத்து கொண்டு இருந்த சீதாலட்சுமி,
ஓடி வந்து எடுத்து "ஹலோ..!" என்றதும், நாங்க " ஸ்ரீ சாரதா தேவி
ஆஸ்ரமத்தில் இருந்து பேசறோம்
மிஸ்டர் ராமன்" இருக்காரா?
என்றதும் என்னவாக இருக்கும்
என்று யோசித்து கொண்டே,

" ஏங்க! சீக்கிரம் வாங்க, உங்களுக்கு தான் ஃபோன். ஏதோ ஆஸ்ரமத்தில
இருந்து."
" எதாவது டோனேஷனா இருக்கும்"
" இல்ல இல்ல உங்க பேர் சொல்லி
கேட்டாங்க"
"கம்பெனிக்கு வேற டைம் ஆச்சு.
இதுவேற." என்று சலித்து கொண்டே
வந்தவன் " ஹலோ!" என்றதும்,
மறுமுனையில் அவர் சொன்ன செய்தி மனதுக்குள் பல விதமான
கலவ

மேலும்

மிகவும் சிறப்பான கதை. வாழ்த்துக்கள்👍👍. 22-Apr-2022 9:23 pm
லதா சேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2022 9:34 pm

தலைவி!!

"அம்மா காஃபி" என்றாள் அனு.
உடனே" அம்மா எனக்கு டீ தான்
வேணும்" என்றான் அருண்.
" சரி சரி உங்க அப்பாவுக்கு ஓட்ஸ் கஞ்சி குடுத்துட்டு வரேன்" என்ற
பத்மா வேகவேகமாக இயங்கி
வேலைக்கு செல்லும் மகனுக்கும்,
காலேஜ் செல்லும் மகளுக்கும்
கேட்டத்தை கொடுத்து விட்டு
ஐந்து நிமிடம் உட்காரலாம் என்று
வந்து சோஃபாவில் அமர்ந்தாள்.

வயிற்றில் பசி கிள்ளியது. சாப்பிடலாமா என்று ஒரு மனம் நினைக்க, இன்னும் எத்தனை எத்தனை வேலைகள் வரிசை
கட்டி நிற்கின்றது என்ற எண்ணம்
வந்து அதை தடுத்தது.

எல்லோருக்கும் கொடுத்தது போக
மீதமிருந்த ஆறிய காஃபியை
தூக்கி வாயில் ஊற்றி கொண்டு
மீண்டும் வேலையை தொடர்ந்தாள்.

ஒரு

மேலும்

இது எனக்கு பிடித்த கதை. மனதைப் பிசைகிறது. சிறப்பு. 21-Apr-2022 9:38 pm
லதா சேகர் - Mahesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Apr-2022 3:26 pm

பல வருடங்கள்....
குடியிருந்த....
பக்கத்து வீட்டுக்காரர்....
காலி செய்து போனார்!

அந்த...
இருசக்கர வாகன
மெக்கானிக் கடை....
மூடப்பட்டுவிட்டது!

தெரிந்த...
டீக்கடை சிறுவன்...
சொந்த ஊர்...
சென்றுவிட்டான்!

தினசரி நடைபயிற்சியில்....
புன்னகைக்கும் நண்பர்.....
நெடு நாட்களாய்...
தென்படவில்லை!

அலுவலகத்திலிருந்து...
மாற்றலாகிப் போகிறவர்....
கரம் நீட்டுகிறார்...
விடைபெற!

தற்காலிகமே...
நிரந்தரமாய்....
புரிந்தும் புரியாமல்...
நிற்கின்றன...
மீளாத நினைவுகளில்!

எனில்...
வாழ்வியல் மாற்றங்கள்....
மாறாமல்.....
வழங்கிக் கொண்டிருக்கின்றன....
சிலருக்கு

மேலும்

நன்றி சகோ💐💐💐💐 05-May-2022 9:19 pm
மிகவும் சிறப்பான வரிகள்! தொடருங்கள் உங்கள் எழுத்து ( கவிதை) பயணத்தை! வாழ்த்துக்கள்!! 💐💐🌷🌷 21-Apr-2022 9:11 pm
மேலும்...
கருத்துகள்

மேலே