முயற்சி
நேற்று கேட்ட.....
ஒரு கதையில்....
நண்பரின்....
கொள்ளுத்தாத்தா...
கோடீஸ்வரராக இருந்தார்!
தாத்தாவும்...
அவ்வாறே வாழ்ந்தார்!
ஆனால் தந்தை மட்டும்....
ஏமாற்றப்பட்டு....
ஏழையானார்!
இவரும் அவ்வாறே!
இக்கதையில்
லயிக்க மறுத்தது...
மனம்!
ஏனெனில்....
இது போன்ற கதைகள்...
ஏராளமாய்
உலவிக் கொண்டிருக்கின்றன....
அவனியெங்கும்!
என்னிடமும்....
இவ்வாறான...
ஒரு கதை உள்ளது!
பழம்பெருமைக் கதைகள்....
பறை சாற்றுகின்றன....
அக்காலப் பெருமைகளையும்....
கதை சொல்வோரின்....
முயற்சி...
இன்மையையும்!
............