அவளில் அவன்

கட்டுக்கடங்காமல் வரும்
எனது கோபங்களை
ஆத்திரங்களை
எரிச்சல்களை
குதர்க்கங்களை
அவதியால் வரும் வசவுகளை
திமிர் பிடித்த வார்த்தைகளை
நின்று பெற்றுக்கொண்டு

அதை வலிக்காது
ஊதிப்புடைத்து சலித்து
கையளவு காதலை மட்டும்
தேன் போல் எடுத்து
என்னை கடந்துசெல்லும்

உன்னை பார்க்கப்பார்க்க
பொறாமை...

எழுதியவர் : ஸ்பரிசன் (19-Aug-22, 9:00 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : avalil avan
பார்வை : 160

மேலே