குட்டி பையன்

இந்தக் காலில்
ஒரு கலர் செருப்பும்
அந்தக் காலில்
ஒரு கலர் செருப்பும்
போட்டுக் கொண்டு நடந்த
என் பாட்டிக்கு மட்டும்தான்
தெரியும்
என் நட்சத்திரங்களின்
நிறங்கள் பற்றி......

*****

மரங்களற்ற சோலையில்
மரமாகி
நின்று பார்க்கிறேன்
சற்று நேரமாவது
மனிதனாகி வெந்து சாகிறேன்.

*****

ஆத்தா சாகும் போது கடைசி
குட்டி பையன் நான் தான்.

ஆத்தா அப்படித்தான்
நினைத்துக் கொண்டிருக்கும்

அப்படியாவது இருந்து
கொள்கிறேன்
குட்டிப்பையனாகவே
என்றும்.....!

*****

பெரியம்மா வீட்டு ஞாயிறு
சித்தப்பா வீட்டு ஞாயிறு
மாமா வீட்டு ஞாயிறு
பாட்டி வீட்டு ஞாயிறு
அண்ணன் வீட்டு ஞாயிறு
தங்கை வீட்டு ஞாயிறு
ஆளுக்கொரு ஞாயிறுகளால்
நிரம்பி இருக்கிறது ஞாயிறு...
எங்கே போனதென்று தெரியவில்லை
எல்லாரும் நிரம்பியிருந்த
எங்கள் வீட்டு ஞாயிறு...?

*****

சாயம் போன பிறகு
சாத்திரம் இல்லை
நரியாகிறது காடு.

*****

மூன்று பக்கமும்
புணரப் படுகிறாள்
நான்காவது பக்கம் செத்தவள்.

*****

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Apr-17, 9:24 pm)
Tanglish : kutti paiyan
பார்வை : 1158

மேலே