சொல்லாத எனது வலிகள் - sagi

என்னுளே புதைந்துக்கிடக்கும்
வலிகளை சுமந்து துடிக்கும்
இதயத்தில் வலிகள் பல .....

உண்மையில்லா உறவுகளிடம்
உண்மையான அன்பை நாடி
ஏமாற்றம் கண்டேன் ......

சில ஏமாற்றங்களை .....
சில தோல்விகளை .....
சில வலிகளை ....
சில உறவுகளை ....

நான் இழந்த
என் சின்னச்சிறு
சந்தோசங்களை
எண்ணிப்பார்த்தேன் ......

என் இதயத்தில்
சோகங்கள் மட்டுமே
நிரந்திரமானது ......

வலிகள் என் வாழ்வில்
இன்று புதிதல்ல ......

என்றேனும் எனக்கும்
உண்மையான உறவுகளும்
சந்தோஷமும் நிலைத்து
நிற்குமென்று நம்புகிறேன் .......

அதுவரை அனைத்துமே
கஷ்டமான இஷ்டத்துடன்
கடந்து செல்வேன் ......

அன்று .....

யாரிடமும் சொல்லாத
என்வலிகளை சொல்வேன் ....

என் உண்மையான
உறவுகளிடம் .....

எழுதியவர் : sagi (17-Apr-17, 8:35 pm)
பார்வை : 668

மேலே