பாரதி - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர் | : பாரதி |
இடம் | : srilanka |
பிறந்த தேதி | : 14-Dec-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2011 |
பார்த்தவர்கள் | : 888 |
புள்ளி | : 115 |
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக புதுமை படைக்க வேண்டுமென்று நினைப்பவள் இவள்rnrnகவிதைகளை அதிகம் நேசிப்பதால் rnகவிதைகளை வடிக்கிறேன்rn
வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்…
ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் தான் மகளிர் தினம் பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை. இந்த
தை பொங்கல் வரலாறு
சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு கொண்டாடும் திருநாளே இந்த பொங்கல் திருநாள். பாரம்பரியமான கலை, கலாச்சாரங்கள் மருவி விடாமல் இன்றும் இந்த பொங்கல் திருநாளில் கொண்டாடுகிறோம். சூரியன் பயணம் செய்வதுபோல் தெரிவதற்கு பூமியின் சுழற்சியே காரணம் என்று விஞ்ஞானம் சொல்லுவதை வெகு காலத்திற்கு முன்னரே முற்றும் துறந்தவர்கள் கூறுயுள்ளார்கள். “உண்மையில் சூரியன் உதிப்பதும் இல்லை; மறைவதும் இல்லை‘ என்று ஞானநூல் கூறிநிற்கிறது.சூரியன் வேத வடிவாக காட்சி தருகிறான் என்று ஞான நூல்கள் சித்தரிக்கின்றது.காலை வேளையில் ரிக் வேதமாகவும், நண்பகலில் யஜுர் வேதமாகவும், மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாகவும் திகழ்கிறான் ஆதவன் என்கிறார்கள். அதுமட்டுமல்லாது ரிக் வேதம் சூரியனை அக்கினியின் முதல்வன் என்றும், யஜூர் வேதம் சகல உலகத்தைக் காப்பவன் என்றும் பாடி பணிகிறது. சாம வேதம் உலகத்தை ஒளிர்விப்பவன் என்று கீதம் இசைக்கிறது.அதேவைளை சூரியனை மும்மூர்த்திகள் என்றும் போற்றப்படுவதையும், சூரிய வழிபாட்டின் மேன்மைகளை பவிச புராணம், பிரம்ம புராணம், மார்க்கண்டேய புராணங்கள் எடுத்துரைத்துள்ளன என்ற விடயத்தையும் கோடிட்டு சொல்லலாம்.
தட்சிணாயனத்தின் ஆறு மாதங்களில் பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் பல நோய்கள், துன்பங்கள் உத்திராயண காலத் தொடக்கத்தில் இறைவன் அருளால் நீங்குவதால், தை மாதம் முதல் தேதி சூரிய பகவானுக்கு ஆராதனைகள் நடைபெறுகின்றன. பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன், உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத்திருநாள்.
பொங்கல் என்பதற்கு ”பொங்கி வழிதல்”, ”பொங்குதல்” என்பது பொருள். அதாவது புதிய பானையில் பால் பொங்கி எழுந்து பொங்கி வழிந்து வருவதால், எதிர்காலம் முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கிச் சிறக்கும் என்பதும், களனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதும் இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்று தொட்டு வரும் நம்பிக்கையும் என்றால் மிகையல்ல.தை பிறந்தால் வழி பிறக்கும் தரணியிலே ஒளி பிறக்கும் தை மகளின் வருகையிலே பரணி சொல்லும் வழி பிறக்கும் என்பார்கள்.
சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். 'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே' என்றுரைத்த கம்பர், 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி' என்ற வள்ளுவப் பெருந்தகையும் சொல்லிச் சென்றவர்கள் தான் நம் உழவர்கள்.
பொங்கல் திருநாள்சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாதான் இந்தப் பொங்கல் விழாவா? என்றெல்லாம் வினாக்கள் கண் முன் விரிகிறது. மனித இயந்திரங்கள் இயந்திர ஓசைகளை உருவாக்கிய காலத்து முன் வேளாண்மை மட்டுமே சமுதாய நகர்வுகளுக்கு அச்சாணியாகத் திகழ்ந்திருக்கிறது. இது தமிழ்ச் சமுதாயத்திற்கு மட்டுமல்ல எல்லாச் சமுதாயத்தினர்க்கும் பொருந்தும். இந்த வேளாண்மை அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானது. எத்தனைப் பொங்கல் காலத்தை இந்தத் தமிழ்க்குடிகள் பார்த்திருக்கும் ? எண்ணிப்பார்க்கும்போது எண்ணிலடங்கா வியப்பே மேலிடுகிறது. 'மேழிச் செல்வம் கோழைபடாது ' என்ற கொள்கையே இத்தமிழ்ச் சமுதாயத்தை ஆட்கொண்டிருக்கிறது.தைத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணைதைத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகைதைத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறுதைத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறுதையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை கூறுகிறது.
போகிப் பொங்கல்‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம் என்றும் கூறப்படுகிறது.போகி என்பது மார்கழிக் கடைசி நாளில் கொண்டாடப்பட்டாலும், பழையனக் கழித்து, புதியன புகவிடும் ' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகி என்றால் இந்திரன் என்று ஒரு பொருள் உண்டு. இந்திரனுக்கு வணக்கம் செய்வது போகிப் பண்டிகை.
தமிழர் வழக்கப்படி இந்திரன் என்பவன் மேகங்களை இயக்குபவன். மேகங்களே வேளாண்மைக்குத் தேவையான நீரைப் பொழிகின்றன. ஆகையின் அவனை வணங்கும் நாளாகப் போகிப் பொங்கல் கருதப்படுகிறது என்ற விடயத்தையும் நாம் பதிவு செய்து கொள்ளலாம்.
சூரியப் பொங்கல்ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. கதிரவன் உத்ராயணப் பயணம் மேற்கொண்டு தனுசிலிருந்து மகரராசியில் நுழையும் இயற்கை நிகழ்வு தான் 'தை 'த் திருநாள் என்று அன்றைய தமிழர்கள் சந்திர, சூரியப் போக்கை வைத்து காலத்தைக் கணித்தவர்கள்.
மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக்கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப் பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டுவரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.'பரிதியே பொருள் யாவிற்கும் முதலே ' என்கிற எட்டயபுரத்து பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தரவும் வேண்டி பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்யப்படுகிறது.
கனுப் பொங்கல்பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், ' கனுப் பீடை ' நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப் பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
கனுப் பிடி கனுப்பிடி வைப்பது பெண்களுடன் பிறந்த சகோதரர்களின் ஷேமத்தைக் குறிக்கவே செய்யப்படுகிறது. கனுப்பிடி வைப்பது என்றால் அந்த வீட்டில் எத்தனை சகோதரர்கள் இருக்கிறார்களோ அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு மஞ்சள் இலையை வைத்து, அதில் முதல் நாள் பிசைந்த தயிர் சாதத்தில் கொஞ்சம் எடுத்து அதில் மஞ்சள் பொடியைச் சேர்த்து கலந்து கொள்வார்கள். கொஞ்சம் வெள்ளைச் சாதமும் எடுத்து வைத்திருப்பார்கள்.
மாட்டுப்பொங்கல்'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு' என்ற வள்ளுவம் தமிழரிடத்து என்றும் வாழ்ந்திருக்கிறது. மனிதர்களிடம் மட்டுமில்லை விலங்குகளுக்கும் அந்நன்றியைக் காட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, வீட்டுக்கு வெளிச்சம்தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து ஏரிழுக்க, பரம்படிக்க, நீரிறைக்க, என்று எத்தனையோ வேலைகளில் மனிதனுக்கு உதவி, எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது.
காணும் பொங்கல்காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந் நாளில்தான்.
ஜல்லிக் கட்டு கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடை பெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
சாவக்கட்டு 'சாவக் கட்டு ' என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடைபெறும். இப்படி பொங்கலின் பெருமையினை மணக்க சொல்லிக்கொண்டே போகலாம் பொங்கல் சுவைபோலவே...
சீனர்களும், ஜப்பானியர்களும்பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் – தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.
தமிழர் ஜப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறதுஜப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதைப் போல் ஜப்பானியர்கள் தமது FONKARA – FONKARA – என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.தைத் திருநாளில் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே ஜப்பானியர்களும் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள் என்பது விந்தையே.
“பொங்கு’ என்னும் சொல்லில் இருந்து வந்த பொங்கல் திருநாள்பால் போல் மனமும் நீர் போல் தெளிவும் வார்த்தையில் இனிமையும் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்தும் மங்கல விழாவாக மனைதோறும் சிறக்கும் சுவைக்கும் திருவிழா.பொங்கலில் மற்றுமோரு சிறப்பைத்தருவது கரும்பு. கரும்பு உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
சாதி மத பேதங்களைக் கடந்து இயற்கைக்கு நன்றி நவிலும் நாளாயிருக்கும் இந்த பொங்கல் திருநாளில் சூரியனைக் கண்டால் விலகும் பனிபோல் துன்பங்களும் துயரங்களும் இன பேதங்களும் விலகட்டும். வாழ்வில் ஒளிபிறக்கட்டும்.

காட்சிப் பிழைகள் - 29
-----------------------------------
உன் தூண்டல்கள் என்னுள் தொட்டிலாக அறிமுகமாகிறது...
அன்று பூக்களை தான் சூடினேன்.
இன்று முட்கள் என் தேகத்தையும் சேர்த்து சுமக்கிறது....
நீ தவறி பார்த்த கணங்களின்
காட்சி பிழை நான்....
பிறந்த குழந்தையாய் கதற விடுகிறது....உன் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்ட என் உணர்ச்சிகள்....
குளம் நிறைய மீன் இருக்கிறது.
ஆனால் நீரும் இல்லை
கொக்கும் இல்லை....
நான் தடுமாறும் பொழுதுகளில் எல்லாம்,என்னை தாங்கி பிடிப்பது உன் இரண்டெழுத்து பெயர் தான்....
நீ பார்த்து சென்ற கடைசி பார்வை,
என் மிச்ச உயிரை உடலிலேயே பிடித்து(வைத்து)ள்ளது....
என் இத
1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர
காதலுக்காகத் துடிப்பதைக் காதல் கண்டுகொள்ள
காவியத்து நாயகியாய் மருகியுருகி நானிருக்க
ஆங்காங்கே உருப்பெற்ற உன் னினைவுகளால்
தேயும் காலணியைப்போற் தேய்ந்தே போனேன்!
கரும்பினிய சிந்தனையில் ஏறிய பஞ்சுப் படுக்கை
முட்களாள் உடலைத் தைக்க எண்ணங்கள் சிதையக்கண்டு
தனித் தியங்கும் இதயத்தால் காதலுக்கு இரையானேன்!
பேசா வுறவு தந்த பித்தத் தால் பித்துப் பிடித்தவளாய்
பிதற்றி நிற்க, பித்தந் தேற்றிவிடும் இதழ் ஒத்தட மென
கூசாமல் கூறும் இவ் இதயத்தால்,
பாவப்பட்ட பாவை தேர்ச் சிலையாய் கனவுத் தேரில்!
கண்ணோரங் கவி பாடி காதல் சடுகுடு யாடி
நிலையாகும் சுகங் காண நாணெண்ணி முயல
முயன்றக்கால் முற்றும் பெற்றது!
இரு மனங்கள் இணைவதே திருமணம். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. அப்படிப்பட்ட உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டால் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாள்வதே சாலச்சிறந்தது. ஆனால் திருமணம் ஆவதற்கு முன்பு ஒரு போலவும், திருமணத்திற்கு பின்பு ஒரு போலவும் மாறிவிடுகிறார்களாம். அதாவது அது ஆணாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி. இப்போதுள்ள நிலையே இதற்கு முக்கிய காரணம் எனலாம்..
இதை விளக்க ஒரு நகைச்சுவை கதை....
திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் கணவனும் மனைவியும் கோயிலுக்கு சென்றார்கள். அப்போது அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிறிய ஒரு முள் இருந்து மனைவியின் காலில் கு
குண்டுச் சத்தங்களாலும் பிணவாடைகளாலும்
மரண ஓலங்களாலும் ரசாயன வாயுவாலும்
நிரம்பியிருந்த முள்ளிவாய்க்கால்
உணர்வுள்ள தமிழன் மனதின்
ஆறாத வடுக்கள்....
அண்ட சராசரம் வரை
ஓங்கியொலித்த குரல்களுக்கு
செவி சாய்க்கா வுலகின் மெத்தனத்தால்
பதுங்கி குழிக்குள்
பதுங்கியது பல்லாயிரம் உயிர்கள்...
வழி நெடுகிலும் கண்ணீர்க்கோடுடன்
வேறு வழியின்றி
முட்கம்பிக்குள் முடங்கிய தமிழினத்தின்
கனவுகள் முறிந்தே போனது....
ஆடைகளை எடுக்கவேனும்
அவகாசம் தராது , துகில் உரியப்பட்டு
அநாதரவாய் நின்றவர்க்கு
ஒட்டுத்துணியேனும் தந்து
தமிழ் மானம் காக்க
பரமாத்மவேனும் வரலியே ...
இன அழிப்பின் வெற்றிக் களிப்பில்
பிண
உன் நினைவுகளைக் கொண்டு
நிரப்பும் என் தனிமையினை
நான் என்னவென்று சொல்ல ???
என்னோடு யுரையாட
எண்ணற்ற நினைவுகளோடு
எனைத்தேடி வந்ததொரு காலமருவி
இப்போது என் பேச்சைக் கேட்க
அலட்டலுமுளறலுமாயுள்ளது யென்கிறாய் ..
உனக்கு உன்னுறவுகளுடனிருக்க
எனக்கு உன்னுறவைத் தவிர
வேறேதுமில்லையுறவுகள் ...
என் செய்வேன் நான் ....
சில நேரங்களில் அன்பாயிருக்கும் நீ
பல நேரங்களில் வெறுப்பினையே யுமிழ்கிறாய் ..
காயம் காணும் என்னிதயத்திற்கு
என் சொல்லி தேற்றிட .....
உன்னிடம் நான் காணும் மாற்றத்திற்கு
காலத்தின் சுழற்ச்சி தான் காரணமோ அல்லது
என் எண்ணங்களின் சிதைவோ
நான் அறியேன் ..... ஆனால் ஏதோவொன்று
நிதமும் என
நண்பர்கள் (55)

பர்ஷான்
இலங்கை (சாய்ந்தமருது)

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி

சே வெ பிரவீன் அய்யர்
சேலம்

மு குணசேகரன்
தஞ்சாவூர்