மனு ந - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மனு ந |
இடம் | : Tirupur |
பிறந்த தேதி | : 31-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 192 |
புள்ளி | : 18 |
எழுத்து.காம் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் அன்புகலர்ந்த வணக்கம் !!
பிறந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் 20 ஆண்டுகள் திருப்பூரில் வசித்து வருகிறேன் பிறப்பால் மலையாளி என்றாலும் முதன் முதலாய் 'அ' என்ற எழுத்தை என் பிஞ்சு விரல்களால் பதித்த மொழி தமிழ். நான் ஒரு மலையாளி என்று என்னும் பொழுது இனம் புரியா மகிழ்ச்சி என்னுள் தொற்றிகொள்கிறது.. ஆனால் நான் தமிழ் கற்றவன் தமிழ் மொழி என் மொழி என்று என்னும் பொழுது அன்பும் பெருமையும் அடைகிறேன் காரணம் தமிழ் தாய் பெற்றெடுத்த மொழிகளுள் மலையாளமும் ஒன்று தானே தாய் பாசம் இல்லாமலா போய்விடும் ?
புதிதாய் உங்கள் கூட்டிற்குள் இணைந்துள்ள இந்த சிறு பட்டாம்பூச்சிக்கும் சிறகடிக்க வாய்ப்புகளை தாருங்கள் ... தங்களின் அன்பான கருத்துக்கள் என்னை
நல்வழிநடத்தட்டும்..
நன்றிகள் பல ........
தேய்ந்த தோள்ப்பட்டை எலும்புகள் சொல்லும் அவள் அவித்தெடுத்த இட்டளிகளின் எண்ணிக்கையை, ஒவ்வொரு முறையும் அவளை சுட்டு வைத்து பாவம் தீர்க்க ஊற்றிய மாவை ஒருமுறைகூட கருக்கியதே இல்லை தோசைக்கல்.
என்றும் காலையில் அவள் கைதொட்டு சாம்பார் கலனில் மிதக்க முருங்கையும்,முள்ளங்கியும் ஆர்ப்பாட்டமே ஆடும் காய்கறிக்கூடையில்,
இந்தமுறையேனும் எடுத்துக்கொள்வாள் என்று நம்பி ஏமாற்றமாய் விரக்தி கொள்ளும் கீரைக்கட்டுகள்.
உப்பும்,மிளகாயும் என்றுமே அவள் மீதும் அவள் சமையல் மீதும் அதிக பாசம் கொண்டவை,
நவீன பாத்திரத்தினுள் அழுத்தம் தாங்கா அரிசிகள் மூடி திறக்கும் வேளையில் அவள் தரிசனம் காணவே தவம் கிடக்கும், பதம் பார்க்கப்பட்ட
சுதந்திரதின விழா மேடையில் பேச்சாளர் வீறு கொண்டு முழங்கினார் !! சுதந்திரம் சுதந்திரம் சுதந்திரம் !! விண்ணிலும் சுதந்திரம் மண்ணிலும் சுதந்திரம்..எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் சுதந்திர நாடு எங்கள் பாரத நாடு .. !! வாய் மூடி மௌனமாய் சிரித்து கொண்டே பறந்தது தேசிய கொடி !! கட்டி வெய்த கொடிக்கம்பத்தில் ...
தந்தையின் ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அசைவும் என் மீது அவர் கொண்ட பாசம்.. ஒவ்வொரு முயற்சியும் என் முன்னேற்றதிர்க்காய் அவர் செய்த தியாகம்.. என்பதை ஆண்மகன்கள் உணரத்தொடங்குவது பெரும்பாலும் அந்த மனிதனின் மறைவுக்கு பின்னர்ராகத்தான் இருக்கும் .. ஆம் இந்த உலகத்தின் மிகவும் அன்பான வார்த்தையை கூட பொய் கோபம் கலந்த கரத்த குரலில் கேட்டதும் அவராகத்தான் இருப்பார்...
!!! என்னடா சாப்பிட்டியா ????
தந்தையின் ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அசைவும் என் மீது அவர் கொண்ட பாசம்.. ஒவ்வொரு முயற்சியும் என் முன்னேற்றதிர்க்காய் அவர் செய்த தியாகம்.. என்பதை ஆண்மகன்கள் உணரத்தொடங்குவது பெரும்பாலும் அந்த மனிதனின் மறைவுக்கு பின்னர்ராகத்தான் இருக்கும் .. ஆம் இந்த உலகத்தின் மிகவும் அன்பான வார்த்தையை கூட பொய் கோபம் கலந்த கரத்த குரலில் கேட்டதும் அவராகத்தான் இருப்பார்...
!!! என்னடா சாப்பிட்டியா ????
ஒவ்வொரு மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்திலும் வலுவாய் ஒலிக்க வேண்டியம் சப்தம் மதுக்கடையை மூடு என்பதல்ல.. நான் இனி குடிக்க மாட்டேன் என்பதே ..
நயவஞ்சக நரிகள் என் நாட்டை ஆள நாவடக்கி நமக்கென்ன என்று நலிந்து வாழும் துப்பில்லா மனிதர்களின் சமுதாயம்..
ஐம்பது திரையில் ஆபாசமாய் நடித்துவிட்டு ஐம்பத்தோராவது திரையில் அம்பாள் வேடமிட்டு நடித்தால் தாயே! என கையெடுத்து வணங்கும் சுய அறிவில்லா மூடர்களின் சமுதாயம் ..
அகிம்சை! அகிம்சை! என்று தன் அகிம்சையால் இவ்வுலகத்தையே வென்றெடுத்த அந்த காந்தி மகானின் உருவம் பொறித்த காகித தாளிர்க்காகத்தான் என் சமுதாயத்தில் எத்தனை ஆயுதம்! எத்தனை வன்முறை!
அன்றோ!!
வளைந்தாலும் வில்லாய் வளைந்து வீரம் காத்த தமிழின கூட்டம்
இன்றோ!!
பணம், பதவி,வெகுமதி என்ற போலி கெள்ரவிதிர்க்காய் கும்பிடு போட்டு போட்டு கேள்விக்குறியாய் க
பச்சிளம் குழந்தையாய் தொட்டிலில் நான் கிடக்க
ஆசையுடன் அன்புகலர்ந்து என் தந்தையிட்டார்
முதலாம் முத்தம்.
அழுகின்ற வேளையில் வரும் கண்ணீரை நிறுத்த
என்னை அள்ளியெடுத்து அரவணைப்புடன் அன்னையிட்டாள்
இரண்டாம் முத்தம்..
பள்ளி பருவத்தில் நாவல் பழம் பரித்துதந்ததின் பலனாய் மகிழ்ச்சி கலந்து என் தோழியிட்டாள்
மூன்றாம் முத்தம்...
கல்லூரி நாட்களில் நட்பின் மேஜையில் நட்பின் கூடலில் வெற்றி களிப்பில் என்னை கட்டி தழுவி நட்புடன் நண்பனிட்டான் நான்காம் முத்தம்....
வாழ்வின் இன்பமாய் வந்தவள் கூடலின் வேளையில் சிறு காமம் கலர்ந்து என் மனைவியிட்டாள்
ஐந்தாம் முத்தம்.....
அந்த கூடலின் விளைவாய் இல்ல