அம்மாவும் அடுப்பங்கரையும்

தேய்ந்த தோள்ப்பட்டை எலும்புகள் சொல்லும் அவள் அவித்தெடுத்த இட்டளிகளின் எண்ணிக்கையை, ஒவ்வொரு முறையும் அவளை சுட்டு வைத்து பாவம் தீர்க்க ஊற்றிய மாவை ஒருமுறைகூட கருக்கியதே இல்லை தோசைக்கல்.
என்றும் காலையில் அவள் கைதொட்டு சாம்பார் கலனில் மிதக்க முருங்கையும்,முள்ளங்கியும் ஆர்ப்பாட்டமே ஆடும் காய்கறிக்கூடையில்,
இந்தமுறையேனும் எடுத்துக்கொள்வாள் என்று நம்பி ஏமாற்றமாய் விரக்தி கொள்ளும் கீரைக்கட்டுகள்.
உப்பும்,மிளகாயும் என்றுமே அவள் மீதும் அவள் சமையல் மீதும் அதிக பாசம் கொண்டவை,
நவீன பாத்திரத்தினுள் அழுத்தம் தாங்கா அரிசிகள் மூடி திறக்கும் வேளையில் அவள் தரிசனம் காணவே தவம் கிடக்கும், பதம் பார்க்கப்பட்ட சோற்று மணியும், அவள் சோறுபோட்டு சாப்பிட்ட ஆறு வட்டல்களில் ஒன்றும் அன்றைய அதிர்ஷ்டசாலிகள் .

எழுதியவர் : மனு (5-Apr-17, 12:41 pm)
சேர்த்தது : மனு ந
பார்வை : 447

மேலே