விழித்துக்கொள் தோழா
நயவஞ்சக நரிகள் என் நாட்டை ஆள நாவடக்கி நமக்கென்ன என்று நலிந்து வாழும் துப்பில்லா மனிதர்களின் சமுதாயம்..
ஐம்பது திரையில் ஆபாசமாய் நடித்துவிட்டு ஐம்பத்தோராவது திரையில் அம்பாள் வேடமிட்டு நடித்தால் தாயே! என கையெடுத்து வணங்கும் சுய அறிவில்லா மூடர்களின் சமுதாயம் ..
அகிம்சை! அகிம்சை! என்று தன் அகிம்சையால் இவ்வுலகத்தையே வென்றெடுத்த அந்த காந்தி மகானின் உருவம் பொறித்த காகித தாளிர்க்காகத்தான் என் சமுதாயத்தில் எத்தனை ஆயுதம்! எத்தனை வன்முறை!
அன்றோ!!
வளைந்தாலும் வில்லாய் வளைந்து வீரம் காத்த தமிழின கூட்டம்
இன்றோ!!
பணம், பதவி,வெகுமதி என்ற போலி கெள்ரவிதிர்க்காய் கும்பிடு போட்டு போட்டு கேள்விக்குறியாய் குனிந்து வளைந்து போன தமிழின கூட்டம்..
இந்த சமுதாயம் பொய் உரைத்திடு! வஞ்சம் நினைத்திடு! களவு செய்திடு! என்று சொல்லி சொல்லியே வளர்த்தது
யாரை என்று கேட்கிறாயா??
நேற்று அவன்! இன்று நான்! நாளை நீயாக கூட இருக்கலாம்!
விழித்துக்கொள் தோழா!
நீ விழிப்பாய் என்ற நம்பிக்கையில் நான் விழிமூடுகிறேன்.