அனுபவம்
என் வாழ்க்கை எனக்கு கற்றுத் தருகிற அனுபவங்கள் எல்லாம்
மூட்டை மூட்டையாக சேர்க்கிறது
என் உள்ளத்தில்.
என் தினங்கள் எனக்கு சுட்டிக் காட்டிய
நல்ல மனிதர்கள் எல்லாம்
சொந்தபந்தமாக மாறுகிறார்கள்
என் இல்லத்தில்.
என் முயற்சிகள் எனக்கு அம்புக்குறியிட்டு
காண்பித்த திசையெல்லாம்
வெற்றி சின்னமாய் தோன்றியது
வீசும் புயலைக்கூட தென்றலாய் வசப்படுத்தலாம் நம் அன்பால்
வேஷம் போடும் தடுமாற்றம் கூட
களையும் நம் பண்பால்.