கோடையில் ஓர் வானவில்

தொலைப்பேசியின் அழைப்பொலிக்கூட காதிற்கு
எட்டா சமயம் அது.
காற்று நுழைய ஆவல் கொண்டாலும்
வழியின்றி தவித்தது அப்பேருந்தில்.
தவறு செய்தாலும் ஒப்புக்கொள்ள மனம் இல்லா
மக்கள் மத்தியில்
அவரின் கை தவறுதலாக அவள் மீது பட்டதும்
கைக்கூப்பி மன்னிப்பு கேட்டவர்
இப்புவியில் இருப்பதாலோ என்னமோ
கோடையில் கூட வானவில் வந்தது
பிறரின் வானம் மாற்ற

எழுதியவர் : சுமி (6-Oct-12, 5:17 pm)
சேர்த்தது : Sumitha Ramakrishnan
பார்வை : 123

மேலே