முத்தம்

பச்சிளம் குழந்தையாய் தொட்டிலில் நான் கிடக்க
ஆசையுடன் அன்புகலர்ந்து என் தந்தையிட்டார்
முதலாம் முத்தம்.
அழுகின்ற வேளையில் வரும் கண்ணீரை நிறுத்த
என்னை அள்ளியெடுத்து அரவணைப்புடன் அன்னையிட்டாள்
இரண்டாம் முத்தம்..
பள்ளி பருவத்தில் நாவல் பழம் பரித்துதந்ததின் பலனாய் மகிழ்ச்சி கலந்து என் தோழியிட்டாள்
மூன்றாம் முத்தம்...
கல்லூரி நாட்களில் நட்பின் மேஜையில் நட்பின் கூடலில் வெற்றி களிப்பில் என்னை கட்டி தழுவி நட்புடன் நண்பனிட்டான் நான்காம் முத்தம்....
வாழ்வின் இன்பமாய் வந்தவள் கூடலின் வேளையில் சிறு காமம் கலர்ந்து என் மனைவியிட்டாள்
ஐந்தாம் முத்தம்.....
அந்த கூடலின் விளைவாய் இல்லை இல்லை பலனாய் பச்சிளம் குழந்தையாய் தொட்டிலில் என் மகள் கிடக்க ஆசையுடன் அன்புகல்ர்ந்து
இதோ! நானும் இடுகிறேன்
ஆறாம் முத்தம்......
முத்தம் தொடரும்........

எழுதியவர் : மனு (28-Sep-12, 11:10 am)
Tanglish : mutham
பார்வை : 207

மேலே