கரைந்து போகிறது கரையாத என் மேனி

காதலுக்காகத் துடிப்பதைக் காதல் கண்டுகொள்ள
காவியத்து நாயகியாய் மருகியுருகி நானிருக்க
ஆங்காங்கே உருப்பெற்ற உன் னினைவுகளால்
தேயும் காலணியைப்போற் தேய்ந்தே போனேன்!

கரும்பினிய சிந்தனையில் ஏறிய பஞ்சுப் படுக்கை
முட்களாள் உடலைத் தைக்க எண்ணங்கள் சிதையக்கண்டு
தனித் தியங்கும் இதயத்தால் காதலுக்கு இரையானேன்!

பேசா வுறவு தந்த பித்தத் தால் பித்துப் பிடித்தவளாய்
பிதற்றி நிற்க, பித்தந் தேற்றிவிடும் இதழ் ஒத்தட மென
கூசாமல் கூறும் இவ் இதயத்தால்,
பாவப்பட்ட பாவை தேர்ச் சிலையாய் கனவுத் தேரில்!

கண்ணோரங் கவி பாடி காதல் சடுகுடு யாடி
நிலையாகும் சுகங் காண நாணெண்ணி முயல
முயன்றக்கால் முற்றும் பெற்றது!

கரைத்தார் கரைத்தால் கல்லும் கரையுமென்பர்
கரையா வுன் மனதை கற் கொண்டு கரைத்தாலும்
கரையா தென்று வாதம் பிடி வாதம் கொண்டு நிற்கும்
உன் பிடிவாத த்திற் கரைந்து போகிறது கரையாத என்மேனி!

விட்ட விழி மூடிய ராப் பகல் வுன் சொப்பனங்கள்
பகல் நேர பௌர்ணமிகள்!
உன் வாழ் விலில்லை நான்
இருந்தும் காட்சி தருகிறேன் அர்த்தநாரீஸ்வரராய்!
கண்படா வுன் காதலால்
புண் பட்ட கோவை யானேன்!
புழுங்கி வரும் பெருமூச்சில்
மூழ்கினேன் நீருமில் லாமல்!
குமுறி யெழும் எரி மலையாய்
கொதிப்புறும் என் நெஞ்சை யாற்ற
தோன்றுவாயா நிழலின்றி நிஜமாக !

எழுதியவர் : RJ Bharathi (7-Jan-16, 6:59 pm)
சேர்த்தது : பாரதி
பார்வை : 124

மேலே