நீயும் பெண்தானே

நீயும் பெண்தானே!
குளிர்நிலவே நீயேன்
குளிர்கின்றாய் – என்
தளிர்மேனியை தினம்
தகிக்காதடி!
பளிரென மின்னும்
பளிங்கு வதனமதை
நலிவுறு செய்தே….
குளிராதடி!
மேகமதில் நீதழுவும்
நேரமதில் – என்
தேகம்தனில் இளஞ்
சூடேறுதடி
நீயென் தாகம்தனை
மூட்டி விட்டே….
தனியே செல்லாதடி!
மோகனராகம் மீட்டிட
மோகித்தவனை
கூட்டி வாடி!
நிலவே….!
நீயும் பெண்தானே!
--- கே. அசோகன்.