தலைப்பு இல்லை

நான் வானம்
நீ
விண்மீன் என்றாள்,

அவள் வானமாக தான்
இருக்கிறாள்...

இந்த மீன் தான்
உதிர்ந்து விட்டது.....

எங்களை இணைத்து
வைத்ததும் காதல் தான்...

எங்களை பிரித்து
வைத்ததும் காதல் தான்...

காதலே
நீ
தீயா ? தென்றலா?
ஒரு முறை தென்றலாய்!!
ஒரு முறை தீயாய்...

அனால் நீ தேகம்
தொட்டால்
தித்திக்குதே
என் தேகம் எல்லாம்
பத்திகிதே....

அடிபட்டால் தான்
வடுக்கள் வருமாம்
ஆனால்
காதலை அனுபவபட்டாலும்
வடுக்கள் வரும் போலும்....

எழுதியவர் : தமிழ்நேயன் (7-Jan-16, 7:44 pm)
சேர்த்தது : தமிழ்நேயன்
Tanglish : thalaippu illai
பார்வை : 84

மேலே