சிறு துளி நீயே
சிறு துளியாய் உன் அழகு
என் மனம் என்னும் பெருங்கடலில் விழுந்ததடி;
அது நீரோடு நீராக கலந்ததடி;
இதயத்துடிப்பு என்னும் அலையில் உன் பெயர் மட்டும் ஒலிக்குதடி;
நீரெல்லாம், ரத்தமெல்லாம் உன் சுவாசத்திற்காக ஏங்குதடி;
நீ வரும் போதெல்லாம்-
என் மனம் என்னும் அலைகடலில் ஓர் சீற்றம்,
மணப்பேன் என்ற ஓர் நம்பிக்கை ஏற்றம்;
என்னுள் நீ சிதறி போனாய் இன்று
நீயும் நானும் ஒன்று;
என்று,
படைத்தான் இறைவன் என்று?????