காட்சிப் பிழைகள் 29 - கிருத்திகா

காட்சிப் பிழைகள் - 29
-----------------------------------
உன் தூண்டல்கள் என்னுள் தொட்டிலாக அறிமுகமாகிறது...

அன்று பூக்களை தான் சூடினேன்.
இன்று முட்கள் என் தேகத்தையும் சேர்த்து சுமக்கிறது....

நீ தவறி பார்த்த கணங்களின்
காட்சி பிழை நான்....

பிறந்த குழந்தையாய் கதற விடுகிறது....உன் நினைவுகளுக்குள் மூழ்கிவிட்ட என் உணர்ச்சிகள்....

குளம் நிறைய மீன் இருக்கிறது.
ஆனால் நீரும் இல்லை
கொக்கும் இல்லை....

நான் தடுமாறும் பொழுதுகளில் எல்லாம்,என்னை தாங்கி பிடிப்பது உன் இரண்டெழுத்து பெயர் தான்....

நீ பார்த்து சென்ற கடைசி பார்வை,
என் மிச்ச உயிரை உடலிலேயே பிடித்து(வைத்து)ள்ளது....

என் இதயத்தை கணம் கணமாய்
கொத்துகிறது மரங்கொத்தி பறவையாய் உன் நினைவுகள்.....

நீ இமைக்கும் கண் அசைவில்
நான் ரகசியமாய் கொல்லப்படுகிறேனா?
சிறையெடுக்கப்படுகிறேனா?

எழுதியவர் : கிருத்திகா (9-Jan-16, 3:31 am)
பார்வை : 396

மேலே