உன் நினைவுகளில் தேய்கிறேன்

உன் நினைவுகளைக் கொண்டு
நிரப்பும் என் தனிமையினை
நான் என்னவென்று சொல்ல ???

என்னோடு யுரையாட
எண்ணற்ற நினைவுகளோடு
எனைத்தேடி வந்ததொரு காலமருவி
இப்போது என் பேச்சைக் கேட்க
அலட்டலுமுளறலுமாயுள்ளது யென்கிறாய் ..
உனக்கு உன்னுறவுகளுடனிருக்க
எனக்கு உன்னுறவைத் தவிர
வேறேதுமில்லையுறவுகள் ...
என் செய்வேன் நான் ....

சில நேரங்களில் அன்பாயிருக்கும் நீ
பல நேரங்களில் வெறுப்பினையே யுமிழ்கிறாய் ..
காயம் காணும் என்னிதயத்திற்கு
என் சொல்லி தேற்றிட .....

உன்னிடம் நான் காணும் மாற்றத்திற்கு
காலத்தின் சுழற்ச்சி தான் காரணமோ அல்லது
என் எண்ணங்களின் சிதைவோ
நான் அறியேன் ..... ஆனால் ஏதோவொன்று
நிதமும் என் மனதைக் கொல்லாமல் கொல்லுகிறது..

உன்னிடம் பேச ஆயிரமாயிரம் வார்த்தைகள்
வார்த்தைக்கோர்வைகளாய் உதிர்க்க
என் உதடுகள் காத்திருக்க
கேட்பதற்கு உன் செவிகள் தயார்
இல்லையெனும் போது
தொண்டைக்குள் சிக்கிக்கொள்ளும்
மீன்முள்ளாய் சிக்கித்தான் கொள்கிறது
வார்த்தைகளும் ...

உனை நீங்கி என்னுயிர் தேய
நீ ஏனோ விலகிச் செல்கிறாய் போன்ற
உணர்வு உள்ளூர வாட்டியெடுக்க
உயிரற்ற உடல் போல்
உலாவுகிறேன் சில நேரம்
உன் நினைவுகளுடனையே .....

உன்னைப்பற்றிய எண்ணங்கள்
என் சிந்தையில் சிக்கி
சொல்லெண்ணாத் துயரங்களைத் தந்தாலுங்கூட
அந்நினைவுகளை விரட்டியடிக்க முடியாதவளாய்
மீண்டும் மெல்ல தட்டிச்செல்கிறது
அந் நினைவுகளே....

செல்லிடப்பேசி தரும் உன் குரலோசையில்
உருகிநான் நின்றிருந்தாலும்,
உன் முகம் நான் காண
வரம் பெறத்தான் வேண்டுமோ ????
இடைவிடாது துடிக்கும் இதயத்தின் துடிப்பில்
தவழும் உன் நினைவுகள்
ஒட்டி யுறவாடியிருப்பினும்
ஏனோ பல நேரங்கள்
தனிமையின் உணர்வை உணர்த்துகிறது ....

தனிமையினை ரசிப்பவள் தான் நான்
இருந்தும் நீண்ட நேர தனிமையானது
இவ்வுலகையினையே வெறுக்கவைக்கிறது ..
என்ன இந்த வாழ்க்கையிது வென்று நிதம்
என் மனமெழுப்பும் வினாக்களுக்கு
விடை கூறயியலா தருணங்கள் பல யிருந்தும்
உன் நினைவுகளில் தான் நான்
உருகி கரைந்தே போகிறேன் .....

எழுதியவர் : RJ Bharathi (18-Dec-15, 1:38 pm)
பார்வை : 147

மேலே