வளையோசை
பிறந்த மழலைக்கு கருப்பு வளையலிது
கண் திருஷ்டி காக்கிறது...
வளரும் குமரிக்கு வண்ண வண்ண வளையலிது
வசந்தத்தை தருகிறது..
அழகிய வளையோசை இது
வாசல் தோறும் ஒலிக்கிறது
வீணை இசைக்கும் கைகளிலே
கணக்காய் ராகமலிக்கிறது...
கோலமிடும் கைகளிலே
கொஞ்சிக்கொஞ்சி செல்கிறது
உடைந்து விழும் வளையலிலே
புது நாதம் ஒலிக்கிறது...
கல்யாண பெண்ணுக்கோ
நாணத்தை தருகிறது...
நிறைமாத தாய்மைக்கோ
நிம்மதியைத் தருகிறது..