எழுத்து

பனிமலை எழுத்து
பாலைவன எழுத்து
பாசத்தின் எழுத்து
பரிதவிப்பின் எழுத்து
பிரிவின் எழுத்து
பிறப்பின் எழுத்து
முத்த எழுத்து
முக்தி எழுத்து
மரண எழுத்து
மானுட எழுத்து என
காலத்துக்கும் எழுத்தை
சுமந்த தபால்காரருக்கு
இன்னும் ஒற்றை விரலில்
வாய்க்கவில்லை
வாட்சப் எழுத்து…

- கவிஜி

எழுதியவர் : கவிஜி (28-Jul-17, 7:22 pm)
Tanglish : eluthu
பார்வை : 372

மேலே