பாசப்பயிர்

சின்ன சின்ன பாப்பா என்
சிந்தை கவரும் பாப்பா
சிட்டு மொழிபேசி நான்
சொன்ன பேச்சை கேட்பாள்
காலையும் மாலையும்
அத்தை மடியில் பூப்பாள்
சின்ன சின்ன பாப்பா
அவள் சிங்கார பாப்பா
சின்ன சின்ன குறும்பு
அவள் சிரித்து பேசும் அரும்பு
வண்ண வண்ண கனவு
அவள் கன்னக்குழியில் கனிவு
சுருண்ட சிகை அழகு
அவளது சின்ன பாதங்கள்
கண்ணைகவரும் பேரழகு...
அவள் கடவுள் கொடுத்த அருள்
அவளின் மூச்சுப்பட்டு
விலகியது என் வாழ்வின் இருள்
என் உயிரில் கலந்த உயிர்
ஈரேழு பிறவியிலும் கருகாத பாசபயிர்...