நெஞ்சில் நிறைந்த மகாத்மா

அனுதினமும் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதற்காக அல்ல,
தனது மனசாட்சிக்கு கீழ்படிந்து நடப்பவன் பேறுபெற்றோன் என் நெஞ்சே...

அவனது பாதுகாப்புக் கேடயம் அவன் கொண்ட நேர்மையான எண்ணமே...
உயர்ந்த அவனது திறமை அவன் பேசும் எளிய உண்மையே என் நெஞ்சே...

பேத உணர்ச்சிகள் அவனை ஆண்டதில்லை...
இறப்பிற்கென்றும் அவன் ஆன்மா தயாராகத் தானிருந்தது என் நெஞ்சே...

உலகின் கவலைகள் அவனைக் கட்டிப்போட்டதில்லை...
ஆடம்பரங்களும், வீண் ஆசைகளும் அவனை ஆளவில்லை என் நெஞ்சே...

வாழ்வின் எல்லா வதந்திகளுக்கும் அப்பாற்பட்டவன்..
தனது மனசாட்சியையே தனது கோட்டையாக்கி வாழ்ந்தவன்...
வீண் புகழ்ச்சிகள் அவனை மயக்கவில்லை...
குற்றச்சாட்டுகள் அவனை நொறுக்கவில்லை என் நெஞ்சே...

இரவும், பகலும் அருட்பெருஞ்சோதியிடம் சேபித்தான்..
அவன் அருளைக் கேட்டான்..
பொருளைக் கேட்கவில்லை...
தீங்கற்ற நாட்களை வேண்டினான்...
நன்கு தெரிந்த நண்பர்களோடும் புத்தகங்களோடும் அடிமைத் தளைகளிலிருந்து தன்னை மீட்டவன்...
உயரும் ஆசையோ, வீழும் பயமோ அற்றவன்..
தன்னை அடக்கி ஆண்டான்..
அரசாங்கங்களை அல்ல...
ஒன்று இல்லாதவன்..
ஆயினும் அனைத்துமுடைவன்...
என்றும் மறவாதே என் நெஞ்சே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Jul-17, 1:54 pm)
பார்வை : 1423

மேலே