தெருள் பெற உயர் தேடல் வேண்டும்

அர்த்தமற்ற பிரிவுகளில் அர்த்தமற்ற சோககீதங்கள் பாடித் திரியும் அன்பு சகோதர, சகோதரிகளே..
உங்களிடைய சகோதரன் நானுரைப்பதைக் கேளீரே...
உலக வாழ்க்கையே விட்டில் பூச்சி வாழ்க்கையாக இருக்க எதை நிரந்தரமென்கிறீர்கள்?...

கொஞ்சக்காலம் இந்த உடலென்ற வீட்டில் தங்கிவிட்டுச் செல்லவே வந்தோம்...
ஆனால் அவ்வீட்டையே உரிமை கொண்டாடுகிறோம்...
பக்கத்துவீட்டையும் நம்முடையதென அபகரிக்கிறோம்...

அருட்பெருஞ்சோதியாய் வீற்றிருக்கும் இறைவனைக் காணாமல் நம்மை நாமே தண்டிக்கிறோம்...
அதனால் ஏற்படும் துன்பங்களை, வலிகளை தீராத வலிகளென்று தீர்மானித்து மூடமாய் முடங்கி வாழ்க்கையில் உண்மையான நோக்கமாகிய ஞானத்தை விலக்கி வைக்கிறோம்...

இதுதான் நாம் வாழும் முறையோ?
சிந்திக்கும் நேரம் வெட்கம் தோன்றவில்லையோ?
என்ன மனிதர்கள் ஐயா நாம்?
அனுதினமும் சோக கீதம் பாடுகிறோம் உயர் தேடுதலில்லா பரதேசிகளாய்...
இந்நிலையே நீடித்தால் நம் சக்தியாவும் மடிந்து நோயால் பீடிக்கப்பட்டு இருப்பதையும் விட்டு மேலும் பல பிறவிகள் கொண்டு சோககீதமே பாடித் திரிவோம்...
இதிலிருந்து மீளவழி தேடுவோம்...
ஆத்மத் திருப்தியால் ஆனந்தமென்னும் ஞானவாழ்வைப் பெறுவோம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (29-Jul-17, 7:28 pm)
பார்வை : 255

சிறந்த கவிதைகள்

மேலே