சிகரம் தொடு

சிகரம் தொடு !!!

சிறப்பு கம்பர் சான்றிதழ் போட்டியாளர் ( 11 )

இளைய சூரியனே
எழு !!!
உனது சுட்டெரிக்கும்
வெயில் எனக்குப்
பிடித்திருக்கிறது .!
சிகரம் தொடுவோம் வா !

ஏனெனில் .....

என் இலட்சியப்
பாதைக்கு தடையாய்
வரும் அனைவரையும்
சுட்டெரிக்க .....
இளைய சூரியனே !
நீ .......எனக்கு வேண்டும் .!!

வெண்குடை நிலவே !
குளிர்ச்சி தரும் உன்னையும்
எனக்குப் பிடித்திருக்கிறது .
ஏனெனில் ....
நான் சிகரம் தொட என் இலட்சியப்
பாதைக்கு உறுதுணையாய் இருப்பவர்கள் மீது
குளிர்ச்சியைப் பொழிய நிலவே .....நீ
எனக்கு வேண்டும் .!!!


இடியும் மின்னலும் கலந்த புயலே !
உன்னையும் எனக்குப் பிடித்திருக்கிறது .
ஏனெனில் ......
என் இலட்சியத்தை
நான் அடைய போராடவேண்டும் என்று
என்னை அறிவுறுத்தப் புயலே !நீ .
எனக்கு வேண்டும் .!!!


மென்மையாக வீசும் தென்றலே !
உன்னையும் எனக்குப் பிடித்திருக்கிறது .
ஏனெனில் .....
இலட்சிய
பாதைக்கு ஊக்கம்
கொடுப்பவளே நீ ...தானே !
எனவே ......தென்றலே ....நீயும்
எனக்கு வேண்டும் !!! .

இளைஞனே !
போராடு !போராடு 1
உனது இலட்சியத்தை
அடையும் வரை மனந்தளராது
போராடு !உன் வாழ்வில்
நீ ...சாதிப்பாய் !
சாதிக்கப் பிறந்தவன் நீ !
சாதனையாளர் பலர் உன்னை
வழி நடத்திச் செல்வர் சிகரம் தொட !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Jul-17, 7:07 pm)
பார்வை : 290

மேலே