யுத்தங்கள்

சொல் இல்லை
வாக்கியம் நீள்கிறது...
புள்ளி அல்லாத புதிரெல்லாம்
சுழலும் உளரும் நீள் மீட்சி...

பற்றி படரும் தோள் தட்டித்
தொடரும் சுடரென தவழும்
மஞ்சள் நிழல்கள்...!

மைவிழிக்குள் மாதவம் உருள
மயக்கம் பொருள் கொய்யும்
அணைத்தல் விதி நெய்யும்...!

ஆடை சரிய அனைத்தும் விரிய
காரியம் எதுவோ
காந்த துகள்கள் ருதுவோ...!
சாத்திய சாளரம் வெட்கித் திறக்கும்
சாத்திர ஜாலம் முக்கி முனகும்.

குழலுக்கு உச்சமென ஒட்டிய
பூக்களின் உட்சவ சோலையின்
பட பட சட சட மிதமழை பின் சதைமழை...!

நிறமாரி உருமாறி நிழல்மாறி நிஜம்மாறி
நீ நானுக்குள் தவளைச்சத்தம்
நான் நீயுக்குள் பாம்பு முத்தம்...!

உடைபட குமிழ், அடைபட எழில்.
படைவிட துளிர், நிறம் படர் அகல்.

சின்னஞ்சிறு வயதோன்றில் சீக்கிரம் நிரம்பிய
பொய்கைபின்னிரவில் யாருமற்று
கிடைக்கிறதாம் செதுக்கிய சிற்பங்கள் ரெண்டும்
அவை புணர்ந்திட்ட யுத்தங்கள் இன்றும்...!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (16-Mar-17, 9:33 pm)
பார்வை : 107

மேலே