தடக்கி விழுந்த நாட்கள்
தடக்கி விழுந்த இடங்களில் நான் கண்ட இன்பம்
...................................................................................................
தொப்புள் கொடியில் தடக்கிய என் கைகள்
உலகத்தைப் பார்க்க போவதை எண்ணி ...
வைத்தியரின் கையில் தடக்கிய என் விரல்கள்
தாயின் அருகில் இருக்கப் போவதை எண்ணி ...
தாயின் மடியில்தடக்கிய என் கால்கள்
அவளின் அரவணைப்பை எண்ணி .....
தந்தை எனை தூக்கும் பொழுது தடக்கிய அவர் பார்வை
எனை முத்தமிடப் போவதை எண்ணி ....
நடக்கப் பழகிய பொழுது தடக்கிய என் பாதங்கள்
ஏங்கியது என் தந்தை தூக்கி கட்டி அணைப்பதை எண்ணி ...
காலில் தடக்கிய கல்லால்
தூக்கிவிடும் புது நல்ல நண்பர்களை எண்ணி...
துன்பங்கள் வாழ்க்கையில் தடக்கிய போது
ஆறுதல் சொல்லும் தோழியை எண்ணி .....
தவறுகளில் தடக்கிய பொழுது
ஆலாசனை கூறும் ஆசிரியரை எண்ணி ....
துள்ளி திரிந்த காலத்தில் அவன் கண்கள் தடக்கிய போது
காதலில் விழப்போகிறேன் என்று எண்ணி....
கண்களில் தடக்கிய பொழுது
கனவுகளை தொலைக்கப் போகிறேன் என்று எண்ணி ....
கனவுகளில் தடக்கிய பொழுது -என்
காலங்களை காதலுக்காக செலவளிப்பதை எண்ணி ...
உன்னை இதயத்துக்குள் வைத்த பொழுது
காதல் தடக்கி விழுந்ததை எண்ணி...
உன் பெயரை உச்சரிக்கும் பொழுது
என் உதடுகளில் தடக்கி விழுந்ததை எண்ணி ....
தடக்கி விழுந்தது என் மனம் மட்டுமல்ல ...
என் மழலைப் பேச்சும் மெளனம் ஆக தடக்கியது அவன் பார்வையை எண்ணி ...