இப்படி பார்த்தால் எப்படி

இப்படி பார்த்தால் எப்படி !
உன் கற்றை விழிப் பார்வை
குத்தி கிழிக்குதடி என் மனதை !

என்பது வயதிலும்கூட எனை
ஏதோ செய்யுதடி உன்
வெட்கம் !

எட்டாண்டுகள் காதல் கர்ப்பம்
தாங்கி நான் பெற்ற முதல்
குழந்தை அல்லவா நீ !

நாட்பட்ட பிரசவம்
என்பதாலோ என்னவோ இன்னும்
மழலையாகவே நீ !

நடை பழகிக் கொண்டிருக்கிறாய்
என் கரம் பிடித்து நீ !

காது கேளா நிலையிலும்
என் காதில் கேட்கிறது
உன் பெயர் மட்டும் !

தேன் துளிக்கு மத்தியில்
பொருள் தேடும் என் பார்வையில்
தெளிவாய் உன் முகம் மட்டுமே !

பொறாமையாய் இருக்குதடி உன்
மடியில் உறங்கும் என்
பேரனைப் பார்க்கையில் !

இதற்காகத்தான் இறக்கத் துடிக்கிறேன்
இறுதியாய் உன் மடிமீது துயில !

எழுதியவர் : முகில் (16-Nov-14, 12:27 am)
பார்வை : 85

மேலே