சிந்தனைச் சிறகில் காதலே வண்ணங்கள்

காதலி நடக்கையில் புல்வெளி - எழில்
கவிதைகள் படிக்கும் என் விழி
கவி வரி அவளது காலடி - காதல்
கனவுகள் எப்போதும் ஜோரடி.....!!

தோள் விழும் முகில் நிழல் கூந்தலாக
தொலை தூர காதலி நினைவிலே
தனிமையில் நடந்தே ரசிக்கிறேன் - அவள் நினைவை
தள்ளாடாமல் அனைத்து ரசிக்கிறேன்...!!

தென்றலுக்கும் நிறம் சிவக்குமோ ?
செல்லமாய் சுண்டினேன் கன்னங்கள் - அவள்
சிரிக்கின்ற முகத்தில் என் எண்ணங்கள் - என்
சிந்தனைச் சிறகில் காதலே வண்ணங்கள்
சிந்தனைச் சிறகில் காதலே வண்ணங்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (16-Nov-14, 12:21 am)
பார்வை : 65

மேலே