முத்தம் - சித்ரா

விழும் நீரை
விரட்டி அடித்து
கண்ணீரை உலர்த்தும்
கன்னத்தில் முத்தம்

பாரம் கலைந்து
பாசம் நிறைந்து
நேசம் உண்ர்த்தும்
நெற்றியில் முத்தம்

தோளில் சாய்ந்து
விரலைக் கோர்த்து
கடத்திப் போகும்
கைகளில் முத்தம்

அடிமை அன்று (இல்லை)
அன்பு என்று
விழுந்தேப் பதிக்கும்
பாத முத்தம்

ஊடல் கொதிக்க
கூடல் அணைக்க
இன்பம் கூட்டும்
இதழின் முத்தம்

பிரிவில் வாட
பைத்தியம் கூட
பயனித்துப் போகும்
செல்போனின் முத்தம்

வேண்டாம் என்றும்
விலகிச் சென்றும்
இழுத்தே அளித்த
இனிக்கும் முத்தம்

வலியில் நோக
மெலிந்தே போக
வைத்தியம் பார்க்க
வந்த முத்தம்

முகமது சிவக்க
மூளையில் அடிக்க
மோகத்தைத் தந்த
முதல் முத்தம்..

அன்பான முத்தம்
எனையாளும் நித்தம்
உள்ளத்தின் யுத்தம்
அதை நிறுத்திடும் முத்தச் சத்தம்..

எழுதியவர் : சித்ரா (14-Nov-14, 1:58 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : mutham
பார்வை : 518

மேலே