என்னவன் நீயானால்

ஒழுகுமொரு
நீல மலையடிவாரத்தில்
மயில் பீலிகள்
கலைக்கும் -கார்முகில்
நாணத்தில்
பித்தேறிக் கிடக்கும்
செம்பொழில்க் காட்சி
வண்ணங்களில்
கொன்றை மரத் தூரிகைகள் ...

கொடிகள் பூக்கும்
தேன்மதுரக் கொஞ்சல்களில்
நம்மையும்
பொம்மையுமாயானது
தீம்பொழில் தேசமொன்று...

நீயல்லவோ
காதலின்
பிறைமொழி வாணன்
நானுமொரு
சொல்லாகிப் பெயர்ந்ததில்
கண்ணிருட்டு மோனத்தில்
மது சூதன் ...!

எழுதியவர் : புலமி (14-Nov-14, 1:59 pm)
பார்வை : 110

மேலே