அன்பே நீ வந்தபோது-4நீ மாயவரமா இல்லை மயிலாடுதுறையா

பூவனத்திற்கு
ஒரு புதிர்
உன் பூவிழி!

யார் என்னைப் பார்ப்பது
உன் கண்களில்!
இன்பபுரியை ஆளும்
இரண்டு ராணிகளா!

ஒரு அன்னம்
அனிச்சம்பூ பறிப்பதுபோல்
வந்தாய்!

ஒரு சந்தனக்கின்னம்
பன்னீர் தெளிப்பதுபோல்
சென்றாய்!

நீதான்
குயிலுக்குக் கிடைக்காத
ராகம்!
குவளைக்குக் கிடைக்காத
வாசம்!

காற்றால் இயங்கும்
என் இதயத்தை
நீ எப்படி
கண்ணால் மாற்றுகிறாய்!

சிலைபோல் அசைந்தாடும்
பேரழகே!
சிலை ஓர் பராசக்தியா!
யார் சொன்னது
வேல்விழிகள் இருந்தால்
வேறெப்படி சொல்வது!

உன் கண்கள்
தூண்டில் போடும்
மீன்களா!
இல்லை
அம்பு வீசும்
மான்களா!
அடடா நான்
எந்த உலகத்தில்
இருக்கிறேன்!

என் மாயவரமே
உன்னை மாற்றிகூட
பார்த்துவிட்டேன்
அப்போதும் நீ
ம்ய்லாடுதுறைதான்!

எழுதியவர் : JAYAPALAN (14-Nov-14, 1:42 pm)
பார்வை : 85

மேலே