ஆசிரியர் தினம்

வாழும் போது புரியாத
வாழ்க்கை போல,
கற்கும் போது புரியவில்லை,
கற்பிக்கும் போது
புரிகிறது, பல
புரியாத புதிர்கள்!

கற்பதுதான் கடினம் அப்பொழுது,
கற்பிப்பதுதான் கடினம்
புரிகிறது இப்பொழுது!

கேலிக்கூத்தும்
கிண்டல்களும் மகிழ்ச்சியாய் அப்பொழுது,
எவ்வளவு இன்னல்கள்
உணர்ந்திருப்பிர்கள்
புரிகிறது இப்பொழுது!

ஆசிரியர்கள் தான் ஏளனம்
அப்பொழுது,
அவர்கள் தான் ஏணிப்படிகள்
புரிகிறது இப்பொழுது!

நல்ல மாணவனாவது
கடினமில்லை,
நல்லாசிரியர் ஆவது
எவ்வளவு கடினம்!

சூரியன் ஒருநாளும்
பலனை பூமியிடம்
எதிர்பார்பதில்லை,
மாணவர்களின்
புகழை ஒருநாளும் - ஆசிரியர்கள்
ஏற்பதில்லை!

என்னென்ன கற்பித்தீர்கள் நினைவுக்கு வருமுன்னே,
எப்படிக் கற்பித்தீர்கள்
நினைவுக்கு வருகின்றன!

இன்று நான் ஆசிரியராக இருந்தாலும்,
என்றும்
எனக்கு கற்பித்த ஆசியர்களுக்கு
மாணவனாகவே
மனதார விழைகிறேன்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்💐
(யாரிடமும் எதனைக்கற்றுக் கொண்டாலும் அவரும் நமக்கு ஆசிரியரே)


Close (X)

0 (0)
  

மேலே